உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடிகளா? அடேங்கப்பா!

Published : Nov 03, 2025, 01:19 AM IST

WWC 2025 Prize Money: உலகக்கோப்பை 2025 வென்ற இந்திய மகளிர் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும்? 2ம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் மற்ற அணிகளுக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி

மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை தட்டித் தூக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஷெபாலி வர்மா (78 பந்தில் 87 ரன்) அதிரடியாலும் தீப்தி சர்மாவின் ஆல்ரவுண்டர் (58 ரன் மற்றும் 5 விக்கெட்) செயல்திறனாலும் பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி பெரும் சாதனை படைத்துள்ளது.

24
மகளிர் உலகக்கோப்பை பரிசுத்தொகை

ஆண்களை மிஞ்சும் வகையில் தன்னப்பிக்கை, விடாமுயற்சியுடன் போராடி கோப்பையை வென்ற நமது வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி முதல் நாடு முழுவதும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்த்து மழை பொழிந்து வருகின்றனர். நடப்பு உலககோப்பையில் ஐசிசி அறிவித்துள்ள மொத்த பரிசுத்தொகை 13.88 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.122.5 கோடி) ஆகும். இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

34
இந்திய அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை?

முதல் உலக்கோப்பையை தட்டித் தூக்கிய இந்திய அணிக்கு 4.48 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39.55 கோடி) பரிசுத்தொகையை ஐசிசி வழங்கியுள்ளது. இது முந்தய உலகக்கோப்பை தொடரை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும். 

இறுதிப்போட்டியில் தோல்வியுற்று இந்தியாவிடம் கோப்பையை பறிகொடுத்து 2ம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி 2.24 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.19.77 கோடி) பெற்றுள்ளது. இது முந்தைய உலகக் கோப்பையின் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியை விட 273 சதவீதம் அதிகம் ஆகும்.

44
மற்ற அணிகளுக்கான பரிசுத்தொகை

அரையிறுதிப் போட்டிகளுடன் வெளியேறிய‌ இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 1.12 மில்லியன் டாலர்கள் (ரூ.9.89 கோடி) சம்பாதித்துள்ளன.

குழு நிலை வெற்றிகள் – ஒரு போட்டிக்கு 34,314 டாலர்கள் (ரூ.30.29 லட்சம்)

5வது–6வது இடத்தைப் பிடிப்பவர்கள் - USD 700,000 (ரூ.62 லட்சம்)

7வது–8வது இடத்தைப் பிடிப்பவர்கள் - USD 280,000 (ரூ.24.71 லட்சம்)

பங்கேற்பு உறுதி செய்யப்பட்ட ஊதியம் - ஒரு அணிக்கு USD 250,000 (ரூ.22 லட்சம்)

Read more Photos on
click me!

Recommended Stories