ஒரே நாளில் இந்தியா படைத்த சாதனை: டி20 மாதிரி விளையாடி ரயிலை விட வேகமாக 50, 100, 150, 200, 250 கடந்த இந்தியா!

First Published | Oct 1, 2024, 10:59 AM IST

IND vs BAN 2nd Test, Kanpur: கான்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிவேகமாக 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை கடந்து புதிய சரித்திர சாதனை படைத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு பெரும் பலத்தை சேர்த்தது. இந்திய அணியின் இந்த அதிரடி ஆட்டத்தால் வங்கதேச அணி திணறடிக்கப்பட்டது.

IND vs BAN 2nd Test, Kanpur 2nd Test

கான்பூர் டெஸ்ட் போட்டியில் 4ஆவது நாளில் இந்தியா அதிவேகமாக டி20 கிரிக்கெட் மாதிரி விளையாடி 50, 100, 150, 200 மற்றும் 250 ரன்களை கடந்து புதிய சரித்திர சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியோடு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது.

களத்திற்கு வந்த ஒவ்வொரு பேட்ஸ்மேனும், டெஸ்ட் போட்டி மாதிரி எல்லாம் விளையாடவில்லை. அவுட்டானாலும் பரவாயில்லை என்று அதிரடியாகவே விளையாடி ரன்கள் குவித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்து சாதனை படைத்தனர். அதன் பிறகு ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் இணைந்துஅதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

Kanpur 2nd Test, IND vs BAN Test

இதன் மூலமாக இந்தியா 10.1 ஓவர்களில் 103 ரன்களை கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக 12.2 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 100 ரன்களை கடந்து இருந்தது. இந்த சாதனையை தற்போது இந்தியாவே முறியடித்துள்ளது. அதன் பிறகு 110 பந்துகளில் 150 ரன்களையும், 146 பந்துகளில் 200 ரன்களையும், 181 பந்துகளில் 250 ரன்களையும் கடந்து புதிய சரித்திரம் படைத்தது.

இதற்கு முக்கிய காரணம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா காம்பினேஷன் தான். அவர்கள் இருவரும் ஆரம்பித்து வைக்கவே பின்வரிசை வீரர்கள் அதே டெக்னிக்கை பின் தொடர்ந்து வங்கதேச பவுலர்களை துவம்சம் செய்தனர். இதன் மூலமாக இந்தியா 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கடைசியில் வந்த ஆகாஷ் தீப் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசினார். ஒரே நாளில் இப்படியொரு உலக சாதனையை படைப்பது இதுவே முதல் முறையாகும்.

Tap to resize

IND vs BAN, Kanpur 2nd Test

இதற்கு முன்னதாக வேகமாக 200 ரன்களை கடந்த ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. இதற்கு முன்னதாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற Australia vs Pakistan போட்டியின் போது 28.1 ஓவர்களில் வேகமாக 200 ரன்கள் குவிக்கப்பட்டது. இந்த சாதனையை இந்தியா வெறும் 24.3 ஓவர்களில் முறியடித்துள்ளது.

இந்தப் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் அரைசதம் கடந்தார். கேஎல் ராகுல் அதிவேகமாக அரைசதம் கடந்தார். ரோகித் சர்மா அடுத்தடுத்த 2 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்து 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் விளாசிய 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். விராட் கோலி அதிவேகமாக 27000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27000 ரன்களை கடந்தார். இந்த சாதனையை விராட் கோலி 594 இன்னிங்ஸ்களில் முறியடித்தார்.

India vs Bangladesh, Kanpur 2 Test

தற்போது கான்பூரில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் வங்கதேசம் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தற்போது வரையில் இந்திய அணிக்கு 41 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!