RCB Worst Players: ஐபிஎல் வரலாற்றில் RCB ஏலத்தில் எடுத்து மோசமான சாதனை படைத்த இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா!

Published : Sep 30, 2024, 10:17 PM ISTUpdated : Sep 30, 2024, 10:19 PM IST

Cheteshwar Pujara, IPL 2025: ஐபிஎல் வரலாற்றில் சரியான வீரர்களைத் தேர்வு செய்யாத அணி என்ற பெயரைப் பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் சரியான வீரர்களைத் தேர்வு செய்யுமா என்பது கேள்விக்குறிதான். ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி செய்த சில மோசமான ஏலங்கள் மற்றும் 2025 மெகா ஏலத்திற்காக தக்கவைக்கப்படக்கூடிய வீரர்களைப் பற்றி இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

PREV
16
RCB Worst Players: ஐபிஎல் வரலாற்றில் RCB ஏலத்தில் எடுத்து மோசமான சாதனை படைத்த இந்திய வீரர் சட்டேஷ்வர் புஜாரா!
RCB Retentions 2025

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முறை கூட டிராபி கைப்பற்றாத அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடந்த ஐபிஎல் ஏலங்களில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு ஐபிஎல் 2025 ஆண்டுக்கான மெகா ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் சரியான வீரர்களை தேர்வு செய்யாத அணி என்ற வரலாறு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு உண்டு.

இதுவரையில் நடைபெற்ற 17 ஐபிஎல் சீசன்களில் ஒரு முறை டிராபி கைப்பற்றாததற்கு ஒரு காரணம் அவர்களது மோசமான அணி தேர்வு தான். ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரூ.15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிரேடு முறையில் வாங்கியது. இது ஆர்சிபி செய்த மிகப்பெரிய தவறு. காரணம், ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபிக்கு குறைவான தொகை கிடைத்தது.

ஐபிஎல் 2024 தொடரில் கேமரூன் க்ரீன் விளையாடிய 13 போட்டிகளில் மொத்தமாக 255 ரன்கள் எடுத்தார். இதில் அதிகபட்சமாக் 46 ரன்கள் அடங்கும். மேலும், பவுலிங்கில் 13 போட்டிகளில் 35.1 ஓவர்கள் வீசி 303 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகள் எடுத்தார். இதே போன்று ஆர்சிபி தவறான வீரர்களை ஏலம் எடுத்த சம்பவங்கள் பல உண்டு. அது என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…

26
RCB Worst IPL Auctions, Cheteshwar Pujara

சட்டேஷ்வர் புஜாரா:

டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு சிறந்த வீரரான சட்டேஷ்வர் புஜாரா, டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கு சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இருப்பினும், ஆர்சிபி அவரை 2011 ஆம் ஆண்டு ரூ.3.22 கோடி கொடுத்து ஏலம் எடுத்தது. ஆனால், ஆர்சிபிக்காக விளையாடிய 3 ஆண்டுகளில் புஜாரா மொத்தமாக 14 போட்டிகள் விளையாடி 143 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் ஒரே ஒரு அரைசதம் அடங்கும்.

36
Alzarri Joseph

அல்சாரி ஜோசப்:

அல்ஸாரி ஜோசப் ஒரு வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் கூட அவருக்கு ஏலத்தில் ரூ.11.5 கோடி கொடுத்தது கொஞ்சம் அதிகம் தான். என்னதான் சிறந்த வீரராக இருந்தாலும் கூட அவருக்கு அதிக தொகை கொடுத்தது ஆர்சிபி செய்த தவறு. 2023 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்கப்பட்ட அல்சாரி ஜோசப் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடி 115 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

46
Kyle Jamieson, IPL 2025 Mega Auctions

கைல் ஜேமிசன்:

ஆர்சிபியின் மற்றொரு மோசமான தேர்வு கைல் ஜேமிசன். ஆர்சிபி அணியானது 2021 ஆம் ஆண்டு ஜேமிசனை ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் ஜேமிசன் விளையாடிய 9 போட்டிகளில் வெறும் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி 65 ரன்கள் எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஜேமிசனுக்கு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.

56
RCB Retained Players - IPL 2025, Virat Kohli and Mohammed Siraj

விராட் கோலி – ரூ.15 கோடி

இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் ஆர்சிபி அணியில் விராட் கோலி ரூ.15 கோடிக்கு தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விராட் கோலி விளையாடிய 15 போட்டிகளில் 5 அரைசதம், ஒரு சதம் உள்பட மொத்தமாக 741 ரன்கள் குவித்தார். இதில், அதிகபட்சமாக 113* ரன்கள் அடங்கும்.

 

முகமது சிராஜ் – ரூ.7 கோடி

ஆர்சிபிக்காக விளையாடி வரும் முகமது சிராஜ் கடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதோடு, 496 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தான் ஐபிஎல் 2025 தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக முகமது சிராஜ் ஆர்சிபி அணியில் ரூ.7 கோடிக்கு தக்க வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

66
Yash Dayal, RCB Retentions 2025

யாஷ் தயாள்:

முகமது சிராஜ் உடன் ஒப்பிடுகையில் யாஷ் தயாள் 14 போட்டிகளில் விளையாடி 459 ரன்கள் கொடுத்துள்ளார். ஆனால், 15 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபியானது யாஷ் தயாளை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதே தொகையுடன் யாஷ் தயாள் ஆர்சிபி அணியில் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

ரஜத் படிதார்:

ரூ.50 லட்சத்திற்கு ஆர்சிபி அணியில் ஏலம் எடுக்கப்பட்ட ரஜத் படிதார், ஐபிஎல் 2024 தொடரில் விளையாடிய 15 போட்டிகளில் 5 அரைசதங்கள் உள்பட 395 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். ஆதலால், அவர் இந்த ஆண்டும் அணியில் தக்க வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அவருக்கு ஆர்சிபி குறைந்தது ரூ.4 கோடி கொடுக்கும் என்று தெரிகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories