Rohit Sharma, India vs Bangladesh 2nd Test
கான்பூர் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சந்தித்த முதல் 2 பந்திலேயே 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும், 5 ஆண்டுகளுக்கு பிறகு உமேஷ் யாதவ்வின் சாதனையையும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் செய்வதாக அறிவித்தது. ஆனால், முதல் நாளில் பெய்த மழையின் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்ட போட்டி 35 ஓவர்களிலேயே முடிக்கப்பட்டது. வங்கதேசம் முதல் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு பெய்த மழையின் காரணமாக இந்தப் போட்டியானது டிராவில் தான் முடியும் என்று ஏசியாநெட் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டது.
Kanpur 2nd Test
அதோடு சில விதிமுறைகள் சொல்லப்பட்டது. எனினும், 2 மற்றும் 3ஆவது நாட்கள் ஒரு ஓவர்கள் கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. பின்னர் 4ஆவது நாளான இன்று போட்டி நடைபெற்றது. இதில், வங்கதேசம் பேட்டிங் செய்தது. எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேசம் இறுதியாக 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்மாக மோமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆனால், குறைவான பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய 2ஆவது வீரரானார்.
Rohit Sharma 2 Balls 2 Sixes
இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ரவீந்திர ஜடேஜா 17,428 பந்துகள் எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த மைல்கல்லை வெறும் 15,636 பந்துகளில் எட்டியிருக்கிறார். இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்து ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்தியது. மேலும், அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து சரித்திரம் படைத்தது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிவேகமாக அரைசதம் அடித்தார். கேஎல் ராகுல் அதிவேகமாக அரைசதம் கடந்தார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்தார். இப்படியொரு ஒரே நாளில் இந்தியா பல சாதனைகளை படைத்தது. அதுமட்டுமின்றி பிற்பகலுக்கு பிறகு பேட்டிங் செய்ய வந்த டீம் இந்தியா அதிரடியாக விளையாடி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
Rohit Sharma Equals Sachin and Umesh Yadav Records
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா யாரும் எதிர்பார்க்காத ஒரு சாதனை சமன் செய்திருக்கிறார். அதாவது, முதல் ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்து ஹாட்ரிக் பவுண்டரி அடித்து இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். அதன் பிறகு ஸ்டிரைக்கிற்கு வந்த ரோகித் சர்மா சந்தித்த முதல் 2 பந்திலேயும் 2 சிக்ஸர்கள் விளாசினார். இதன் மூலமாக 2013 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 பந்தில் 2 சிக்ஸர்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
இதே போன்று 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 பந்தில் 2 சிக்ஸர்கள் அடித்த உமேஷ் யாதவ்வின் சாதனையை சமன் செய்தார். மேலும், இந்தப் போட்டியில் 2 சிக்ஸர்கள் அடித்து 2 பந்தில் 2 சிக்ஸர்கள் அடித்த 3ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார். இப்படியொரு சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதே போன்று இந்த கிரீன் பார்க் மைதானத்தில் டாஸ் ஜெயித்த எந்த இந்திய கேப்டனும் பவுலிங் தேர்வு செய்தது கிடையாது.
Rohit Sharma
அப்படியிருக்கும் போது 60 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாஸ் ஜெயித்து பவுலிங் தேர்வு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற மறக்க முடியாத சாதனையையும் ரோகித் சர்மா படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தற்போது வரையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கான்பூர் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலமாக இந்தியா 98 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்திலேயே நீடிக்கும்.
India vs Bangladesh Kanpur 2nd Test
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023 - 2025) இறுதிப் போட்டிக்கான ரேஸில் இந்தியா விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டியில் தோல்வியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது. இதே போன்று ஆஸ்திரேலியா விளையாடிய 12 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. மேலும், இலங்கை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.
வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளே தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. அதன் பிறகு அதன் பிறகு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
ஜூன் மாதம் இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதையடுத்து 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.