பிரம்மாண்டமாக தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை – டிக்கெட் பெறுவது எப்படி, போட்டியை எங்கு காணலாம்?

Published : Oct 01, 2024, 10:24 AM IST

Womens T20 World Cup 2024: மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் 9ஆவது சீசன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் ரூ.113 முதல் தொடங்குகின்றன, முன்பதிவு செய்ய t20worldcup.platinumlist.net என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

PREV
15
பிரம்மாண்டமாக தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை – டிக்கெட் பெறுவது எப்படி, போட்டியை எங்கு காணலாம்?
Women's T20 World Cup 2024

மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் 9ஆவது சீசன் வரும் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது. ரோகித் சர்மாவைப் போன்று ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும் மகளிர் டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொட்ர அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மகளிருக்கான டி20 உலகக் கோப்பை 2024 தொடரானது பரபரப்பான போட்டியாக அமைய இருக்கிறது. இந்த தொடர் இந்தியாவில் நடைபெறவில்லை.

25
Harmanpreet Kaur, Women's T20 World Cup 2024

துபாய் மற்றும் ஷார்ஜாவிலும் இந்த டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மூலமாக நடத்தப்படும் இந்த தொடரை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள். பரபரப்புக்கு மத்தியில் தொடங்கப்படும் இந்த தொடருக்கான டிக்கெட்டுகள் இப்போது விற்பனைக்கு உள்ளன. எப்படி டிக்கெட்டுகள் பெறுவது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரானது மிக பிரம்மாண்டமாக தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையடுத்து முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.

35
Women's T20 World Cup 2024, India, Women Cricket

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 டிக்கெட்:

மகளிருக்கான டி20 உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விலையானது ரூ.113 (5 AED) முதல் தொடங்குகிறது. பிரீமியம் சீட் என்றால் ரூ.910 (40 AED) முதல் கிடைக்கிறது. 2 போட்டிகள் என்றால் ஒரே டிக்கெட்டில் 2 போட்டிகளையும் கண்டு ரசிக்கலாம். இதற்கு ஒருநாள் டிக்கெட் பாஸ் கட்டணமாக ரூ.340 (15 AED) வசூலிக்கப்படுகிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான டிக்கெட் வாங்குவது எப்படி?

டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு செய்து கொள்ள இப்போதே அணுகலாம். டிக்கெட்டுகளை வாங்க, நீங்கள் t20worldcup.platinumlist.net என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு போட்டிகள் மற்றும் போட்டிக்கான டிக்கெட்டுகளின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

45
2024 ICC Women's T20 World Cup

இந்திய மகளிர் அணி விளையாடும் போட்டிகள்:

அக்டோபர் 4 – இந்தியா – நியூசிலாந்து – துபாய்

அக்டோபர் 6 – இந்தியா – பாகிஸ்தான் – துபாய்

அக்டோபர் 9 – இந்தியா – இலங்கை - துபாய்

அக்டோபர் 13 – இந்தியா – ஆஸ்திரேலியா – ஷார்ஜா

மொத்தம் 23 போட்டிகள் கொண்ட மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று மொத்தமாக 10 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த 10 அணிகளும் குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிந்து விளையாடுகின்றன.

இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு செல்லும். இதில் தோல்வி அடையும் அணிகள் வெளியேறும். வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும். இறுதிப் போட்டி அக்டோபர் 20 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

55
Harmanpreet Kaur, 2024 ICC Women's T20 World Cup

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதே போன்று மகளிர் டி20 உலகக் கோப்பையை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் இந்திய அணி டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories