IND vs PAK: எங்க கிட்ட அடி வாங்குவதற்கே வருவீங்களடா! பாகிஸ்தானை அசால்ட்டாக ஊதித் தள்ளிய இந்தியா! மாபெரும் வெற்றி!

Published : Sep 14, 2025, 11:21 PM ISTUpdated : Sep 14, 2025, 11:30 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் கலக்கினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் சூப்பராக விளையாடினார். 

PREV
14
Asia Cup 2025: India Beat Pakistan

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். அக்சர் படேல், பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

24
அதிரடியில் கலக்கிய அபிஷேக் சர்மா

பின்பு எளிய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார். பாகிஸ்தானின் நம்பர் 1 பவுலரான ஷகின் ஷா அப்ரிடி பந்தில் சிக்சர், பவுண்டரிகளை விளாசிய அவர் ஸ்பின்னர்கள் ஓவரிலும் சிக்சர் நொறுக்கினார். மறுபக்கம் சுப்மன் கில்லும் சில பவுண்டரிகளை ஓட விட்டார். அணியின் ஸ்கோர் 2 ஓவரில் 22 ஆக உயர்ந்தபோது துணை கேப்டன் சுப்மன் கில் 10 ரன்னில் சயீம் அயூப் பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்றபோது ஸ்டெம்பிங் ஆனார்.

34
திலக் வர்மா சூப்பர் பேட்டிங்

மறுமுனையில் அதிரடியில் வெளுத்துக் கட்டிய அபிஷேக் சர்மா வெறும் 13 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் அடித்து சயீம் அயூப் பந்தில் கேட்ச் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 3.4 ஓவரில் 41/2 என்ற நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், இளம் வீரர் திலர் வர்மாவும் சிறப்பாக விளையாடினார்கள். பாகிஸ்தான் ஸ்பின பவுலர்கள் தாக்குதல் தொடுத்த நிலையில், இருவரும் நேர்த்தியாக ஒன்றிரண்டு ரன்கள் சேர்த்தும், தேவையான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள்.

இந்திய அணி அபார வெற்றி

சூப்பராக விளையாடிய திலக் வர்மா 31 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து சயீம் அயூப்பின் மேஜிக் ஸ்பின்னில் போல்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 12.2 ஓவரில் 97/3 ஆக இருந்தது. மேற்கொண்டு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் தனக்கே உரித்தான ஸ்வீப் மற்றும் கட் ஷாட்களை விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாச்த்தில் அபார வெற்றி பெற்றது.

44
கேப்டன் சூர்யகுமாரின் சூப்பர் இன்னிங்ஸ்

அசத்தலாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். ஷிவம் துபே 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். பாகிஸ்தான் அணி ஸ்பின் பவுலிங் ஓரளவு நன்றாக இருந்த நிலையில், அந்த அணியின் பேட்டிங் சொதப்பியதே படுதோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது. இந்தியா 2 போட்டியில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு இது முதல் தோல்வி ஆகும்.

Read more Photos on
click me!

Recommended Stories