மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி சார்பில் ஜெஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான முதல் போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது.
23
இந்திய அணி பேட்டிங்
இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா சார்பில் ஜெஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி உள்ளனர்.
33
இரண்டாவது போட்டியிலும் ஓங்கும் இந்திய அணியின் கை
முதல் போட்டியைப் போன்றே இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி களம் இறங்கி உள்ளது. முதல் போட்டியிலேயே இந்திய அணி மெகா வெற்றியைப் பதிவு செய்த நிலையில், இரண்டாவது போட்டியிலும் அதே அணி எந்தவித மாற்றமும் இன்றி களம் இறக்கப்பட்டுள்ளது.