ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். முகமது சிராஜும், குல்தீப் யாதவ்வும் மாஸ் காட்டியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டில் இந்திய பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து, சமீபத்திய ஐசிசி ஆண்கள் டெஸ்ட் வீரர் தரவரிசையில் அவர்கள் முன்னேறியுள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
24
பும்ரா நம்பர் 1, சிராஜ், குல்தீப் கலக்கல்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முகமது சிராஜ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதே போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, நம்பர் 1 டெஸ்ட் பந்துவீச்சாளராக தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், அகமதாபாத்தில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஏழு இடங்கள் முன்னேறி 21-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
34
ஜடேஜா, கே.எல்.ராகுல்
டெஸ்ட் பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையிலும் இதே போன்ற முன்னேற்றம் காணப்படுகிறது. அனுபவ ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆட்டமிழக்காமல் சதம் அடித்ததன் மூலம்,ஆறு இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார். வலது கை பேட்ஸ்மேன் கே.எல். ராகுலும் இந்தப் போட்டியில் சதம் அடித்தார். இதன் மூலம் அவர் நான்கு இடங்கள் முன்னேறி டெஸ்ட் பேட்டர்கள் பட்டியலில் 35-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தின் அனுபவ வீரர் ஜோ ரூட் இந்தப் பிரிவில் கணிசமான முன்னிலையுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலிலும் ஜடேஜா தனது முன்னிலையை அதிகரித்துள்ளார்.
சக வீரர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் நான்கு இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்து, முதல் 10 இடங்களுக்குள் நுழையும் நிலையை நெருங்கியுள்ளார். டி20 தரவரிசையில் பவுலிங்கில் இந்திய வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.