India vs Australia 5th T20I: இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு!

First Published | Dec 3, 2023, 3:55 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

India vs Australia 5th T20I Bengaluru Rain

இந்தியா வந்த ஆஸ்திரேலியா அணியானது முதலில் 4 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் இந்தியா 2-1 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஆனால், சொந்த மண்ணில் 1-2 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இழந்தது.

IND vs AUS Bengaluru Rain

இதையடுத்து தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. இதில், நடந்து முடிந்த 4 போட்டிகளின் முடிவுகளின்படி இந்தியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது.


India vs Australia Bengaluru Rain

இந்தப் போட்டியானது மழையால் பாதிக்கப்படக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. AccuWeather கணிப்பின்படி, பகலில் 40 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், 90 சதவிகிதம் வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழைக்கான வாய்ப்பானது 25 சதவிகிதமாக குறைகிறது. அதோடு, வானம் தெளிவாக காணப்படும் என்று கூறியுள்ளது.

Bengaluru Rain

என்னும், வங்கக் கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் மிக்ஜம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் டிசம்பர் 5ஆம் தேதி தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Ruturaj Gaikwad

இந்த மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mukesh Kumar

பெங்களூரு மைதானத்தில் டி20 போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததில்லை என்ற வரலாறு இருந்தாலும், சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியானது அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ravi Bishnoi

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் அதிகபட்ச ஆவரேஜ் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர் 265. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணியானது 12 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணியானது 14 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

IND vs AUS 5th T20

இரு அணிகளும் 30 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளன. இதில், 18 போட்டிகளில் இந்திய அணியும், 11 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த மைதானத்தில் இந்திய அணியானது 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. மேலும், 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

India vs Australia 5th T20I

இன்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 19 ரன்கள் எடுத்தால் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். இதுவரையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 டி20 போட்டிகளில் விளையாடிய கெய்க்வாட் 219 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 4 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.    

Latest Videos

click me!