Tiger Pataudi Memorial Lecture: கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் விராட் கோல் – பிரையன் லாரா பாராட்டு!

First Published | Dec 3, 2023, 3:06 PM IST

நான் எனது மகன் ஏதேனும் விளையாட்டு விளையாட வேண்டும் என்றால், விராட் கோலியின் அர்ப்பணிப்பை தான் பின்பற்றுவேன் என்று அவரது குணங்களை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா பாராட்டியுள்ளார்.

Virat Kohli

இந்தியாவில் நடந்து முடிந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், 11 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 3 சதங்கள் உள்பட 765 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றார். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒயிட்பால் கிரிக்கெட்டிற்கு விடை கொடுத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இடம் பெறாத விராட் கோலி டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

ICC World Cup 2023

இந்த நிலையில், தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, தனது மகன் ஏதேனும் விளையாட்டு விளையாட வேண்டும் என்றால், அதற்கு விராட் கோலியின் அர்ப்பணிப்பை தான் பயன்படுத்துவேன் என்று அவரது குணங்களை பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் அணியின் கேப்டனாக இருந்தவர் நவாப் முகமது மன்சூர் அலி கான் பட்டோடி. டைகர் பட்டோடி என்று புனைப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.


Virat Kohli

கொல்கத்தாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டைகர் பட்டோடியின் நினைவு விரிவுரை நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்ட பேசிய பிரையர் லாரா கூறியிருப்பதாவது: விராட் கோலியின் அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றைப் பற்றி பேசினார். கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் விராட் கோலி. எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவர், ஏதேனும் விளையாட்டில் விளையாட ஆசைப்பட்டால் விராட் கோலியின் அர்ப்பணிப்பை பயன்படுத்தி அவனது பலத்தை அதிகப்படுத்துவேன்.

Virat Kohli

நம்பர் ஒன் விளையாட்டு வீரராக ஆவதற்கு என்ன வேண்டுமோ அதனை நான் செய்வேன். விராட் கோலியைப் பொறுத்த வரையில் இந்திய அணியின் உலகக் கோப்பையை வெல்லாததால், அவரது ஆட்டம் ஒரு பொருட்டே கிடையாது என்று சொல்வார்கள். ஆனால், அணியின் வெற்றியின் துணை என்பது தனிப்பட்ட வெற்றியாகும். உலகக் கோப்பை முழுவதும் விராட் கோலி தன்னால் முடிந்தவற்றை செய்தார்.

Brian Lara

மேலும், உண்மையான மரபு என்ற வார்த்தையை பயன்படுத்தினார். கோலியிடம் என்னை கவர்ந்தது, உண்மையான பாரம்பரியம். ஏனென்றால், அவர் கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியிருக்கிறார், அவரிடம் இருக்கும் ஒழுக்கம் எப்போதும் தனித்து நிற்கிறது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!