Ravichandran Ashwin
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இதுவரையில் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளும், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
Ravichandran Ashwin
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில், தனது வாழ்க்கையில் இருண்ட பக்கம் குறித்தும் தனது மன போராட்டம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தனது மன நலத்துடன் போராடியதாக கூறினார். மேலும், ஒவ்வொரு சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை அந்த தருணங்களில் உணர்ந்ததாக கூறினார்.
Ravichandran Ashwin
நான் ஒன்றும் ராஜதந்திரி கிடையாது. ஆனால், நான்கைந்து ஆண்டுகளாக வாழ்க்கையில் இருளில் இருந்ததாக உணர்ந்தேன். மன ஆரோக்கியத்திற்கும் உதவி செய்தேன். இருளில் எந்த சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
Ashwin Cricket Career
மேலும், தனது எதிர்காலம் குறித்தும் பேசினார். கிரிக்கெட்டிற்குப் பிறகு வாழ்க்கையை தேடுவதாக அவர் கூறினார். மேலும், அவரது ஓய்வு குறித்து பேசுகையில், பவுலிங் அல்லது பேட்டிங்கில் வெறுப்படையும் நிலையில் தனது ஓய்வு குறித்து முடிவு எடுப்பேன். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கிரிக்கெட்டிற்கு பிறகு வாழ்க்கைக்கு தயாராகி வருகிறேன். ஆனால், நான் எனது கிரிக்கெட்டில் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். பேட்டிங்கிலும் எனது பங்களிப்பை அளித்த நான், அமெரிக்கா சென்று பேஸ்பால் பயிற்சி செய்தேன்.
Ravichandan Ashwin
எப்போது எனக்கு பேட்டிங் மற்றும் பயிற்சியில் எரிச்சல் ஏற்படுகிறதோ, அப்போது நான் அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்வேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது மனநலப் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசுகின்றனர். இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், விராட் கோலி கூட தங்களது இருண்ட பக்கம் குறித்து கூறியிருந்தனர். தற்போது அந்த பக்கத்தை கடந்து வந்து வலுப்பெற்று வருகின்றனர்.