New Zealand Tour Of Bangladesh
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியானது முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நியூசிலாந்து 2-0 என்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 28 ஆம் தேதி தொடங்கியது.
BAN vs NZ Test
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 317 ரன்கள் எடுத்தது. இதில், கேன் வில்லியம்சன் 104 ரன்கள் எடுத்தார். பின்னர், 7 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நிதானமாக விளையாடி சதம் அடித்தாவர். அவர் 198 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
BAN vs NZ 1st Test
முஷ்பிகுர் ரஹீம் பொறுமையாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக, வங்கதேச அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணிக்கு 332 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Bangladesh vs New Zealand
இதையடுத்து, 332 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. 4ஆம் நாள் முடிவில் நியூசிலாந்து அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், டாம் லாதம் 0, டெவான் கான்வே 22, கேன் வில்லியம்சன் 11, ஹென்ரி நிக்கோலஸ் 4, டாம் பிளண்டல் 6, கிளென் பிலிப்ஸ் 12, கைல் ஜேமிசன் 9 என்று சீனியர் வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Bangladesh vs New Zealand Test Match
டேரில் மிட்செல் மற்றும் இஷ் ஜோதி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி வருகின்றனர். மிட்செல் 44 ரன்களுடனும், ஜோதி 7 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். நான்கு நாட்கள் முடிவில் வங்கதேச அணி 117 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, மிட்செல் மற்றும் இஷ் ஜோதி இருவரும் 5ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இதில், மிட்செல் கூடுதலாக 14 ரன்கள் சேர்த்த நிலையில், 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
New Zealand vs Bangladesh Test
கேப்டன் டிம் சவுதி களமிறங்கினார். அவர், 24 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசியாக இஷ் ஜோதி 22 ரன்களில் ஆட்டமிழக்கவே நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Bangladesh vs New Zealand Test
இதன் மூலமாக முதல் முறையாக நியூசிலாந்தை தனது சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேச அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேச அணி 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
BAN vs NZ
பவுலிங்கைப் பொறுத்த வரையில் வங்கதேச அணி வீரர் தைஜூல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். நயீம் ஹசன் 2 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் மெஹிடி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பறினர். இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய தைஜூல் இஸ்லாம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.