4ஆவது டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமே கிளென் மேக்ஸ்வெல் தான்: நெட்டிசன்கள் கருத்து!

First Published | Dec 2, 2023, 10:51 AM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Jitesh Sharma

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று ராய்பூர் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது.

India vs Australia 4th T20

இதில், அதிகபட்சமாக ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 37 ரன்களும், ருத்ராஜ் கெய்க்வாட் 32 ரன்களும் எடுத்தனர். ஜித்தேஷ் சர்மா 35 ரன்கள் எடுத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.


Maxwell

பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் மேக்ஸ்வெல் போன்று அதிரடி காட்ட ஆஸ்திரேலியா அணியில் யாரும் இல்லை. டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் சேர்த்து அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோஷ் பிலிப் 8 ரன்னும், பென் மெக்டெர்மோட் 19 ரன்னிலும், ஆரோன் ஹார்டி 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Glenn Maxwell

டிம் டேவிட் 19 ரன்களில் நடையை கட்ட, மேத்யூ ஷார்ட் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மேத்யூ வேட் கடைசி வரை போராடியும் எந்த பலனும் இல்லை. அவர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்களில் தோற்றது.

Ruturaj Gaikwad

கடைசி 12 பந்துகளில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தது. கேப்டன் மேத்யூ வேட் மற்றும் கிறிஸ் க்ரீன் களத்தில் இருந்தனர். முகேஷ் குமார் 19ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரில் அவர் 4, 1, 1, 0, 2, 1 என்று மொத்தமாக 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Ruturaj Gaikwad

20ஆவது ஓவரை ஆவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் 0, 0, 2, வைடு, 6, 0, 1 என்று மொத்தமாக 10 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்களில் தோல்வியை தழுவியது.

Mukesh Kumar

ஆனால், இதற்கு முன்னதாக 3 ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மேத்யூ வேட் இருவரும் களத்தில் இருந்தனர். 19ஆவது ஓவரை அக்‌ஷர் படேல் வீசினார். அந்த ஓவரில், 4 2 4 N 6 1 B4 என்று மொத்தமாக 22 ரன்கள் எடுக்கப்பட்டது.

India vs Australia 4th T20

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டுள்ளது. அந்த ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசியுள்ளார். அந்த ஓவரில் 2 பந்துகளை வேட் எதிர்கொண்டார். அதன் பிறகு மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். அந்த ஓவரில் மட்டும் 4 1 6 4 4 4 என்று மொத்தமாக 23 ரன்கள் எடுக்கப்படவே, ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Suryakumar Yadav

ஆனால், இந்தப் போட்டிக்கு பிறகு மேக்ஸ்வெல்லை ஆஸ்திரேலியா திரும்ப அழைக்கவே அவர் நாடு திரும்பினார். ஆதலால், அவர் 4ஆவது டி20 போட்டியில் இடம் பெறவில்லை. ஒருவேளை அவர் இடம் பெற்றிருந்தால், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

IND vs AUS 4th T20

எது எப்படியோ, 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை இரவு பெங்களூரு மைதானத்தில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Axar Patel

இதன் மூலமாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது போட்டியில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றிய மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 3 ஆம் தேத்தி பெங்களூரு மைதானத்தில் நடக்கிறது.

Latest Videos

click me!