டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை!

First Published | Dec 1, 2023, 9:59 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டி கிரிக்கெட்டில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்து ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்துள்ளார்.

Ruturaj Gaikwad 117 Innings

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி தற்போது ராய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

Ruturaj Gaikwad

இதில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காத ஜெய்ஸ்வால், 2ஆவது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். 3ஆவது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். 5ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். கடைசியாக அவர் 28 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 37 ரன்களில் ஆரோன் ஹார்டி பந்தில் ஆட்டமிழந்தார்.


IND vs AUS 4th T20 Match

இவரைத் தொடர்ந்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 8, சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு சிறந்த பினிஷர் என்று சொல்லப்படும் ரிங்கு சிங் களமிறங்கினார். ரிங்கு மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் அதிரடி காட்டினார். எனினும், கெய்க்வாட் 28 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உள்பட 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

India vs Australia 4th Match

இந்த நிலையில், இந்தப் போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பிடித்துள்ளார். அவர், 116 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக, கிறிஸ் கெயில், 106 இன்னிங்ஸ்லிலும், ஷா மார்ஷ் 113 இன்னிங்ஸிலும், பாபர் அசாம் 115 இன்னிங்ஸிலும், டெவான் கன்வே 116 இன்னிங்ஸிலும், ருதுராஜ் கெய்க்வாட் 116 இன்னிங்ஸிலும், கேஎல் ராகுல் 117 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

ஜித்தேஷ் சர்மா 19 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸ் உள்பட 35 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை அதிரடி காட்டிய ரிங்கு சிங் 46 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அக்‌ஷர் படேல் 0, தீபக் சாஹர் 0, ரவி பிஷ்னோய் 4 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.

ருதுராஜ் கெய்க்வாட்

பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆஸ்திரேலியா அணி தரப்பில் பென் மெக்டெர்மோட் 3 விக்கெட்டுகளும், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப் 2 விக்கெட்டுகளும், தன்வீர் சங்கா 2 விக்கெட்டுகளும் ஆரோன் ஹார்டி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest Videos

click me!