IND vs NZ 1st T20: இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 1 என்ற கணக்கில் முதன்முறையாக வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்தது. இந்த இரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 21) தொடங்குகிறது. நாக்பூரில் நாளை இரவு 7 மணிக்கு முதல் டி20 போட்டி நடைபெற உள்ளது.
24
இஷான் கிஷன் 3வது இடத்தில் களமிறங்குவார்
இந்த நிலையில், முதல் டி20 போட்டியில் இடது கை பேட்டர் இஷான் கிஷன் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
முதல் டி20 போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார், ''இஷான் கிஷன் மூன்றாவது இடத்தில் விளையாடுவார். அவர் டி20 உலகக் கோப்பை அணியின் ஒரு பகுதியாக இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எனவே அவர் முன்னதாக விளையாட தகுதியானவர் என்று நான் உணர்கிறேன். 3-வது இடத்திற்கு இஷான் தான் எங்களின் சிறந்த தேர்வு என்று நான் நினைக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
34
ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கேள்விக்குறி
இந்திய டி20 அணியில் அதிரடி வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அழைக்கப்பட்டுள்ளார். அவர் பொதுவாக 3வது இடத்தில் விளையாடுவார். இப்போது இஷான் கிஷன் 3வது இடத்தில் களமிறங்குவார் என சூர்யகுமார் அறிவித்துள்ளதால் ஷ்ரேயார் ஐயர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இஷான் கிஷன் அசத்தல் பேட்டிங்
இஷான் கிஷன் டி20 போட்டிகளில் மூன்றாவது இடத்தில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளார். இரண்டு அரைசதங்கள் உட்பட 28.50 சராசரியில் 114 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் 32 போட்டிகளில் விளையாடி 25.67 சராசரியில் 796 ரன்கள் எடுத்துள்ளார். ஆறு அரைசதங்களை அடித்துள்ளார்.
இஷான் கிஷன் தனது கடைசி டி20 போட்டியை நவம்பர் 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்காத நிலையில், சையத் முஷ்டாக் அலி டிராபியில் கலக்கியதால் மீண்டும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.