விராட் கோலி நியூசிலாந்துக்கு எதிராக 36 இன்னிங்ஸ்களில் ஏழாவது ஒருநாள் சதம் விளாசியுள்ளார். இது அந்த அணிக்கு எதிராக ஒரு பேட்டர் அடித்த அதிகபட்சமாகும். மேலும்டெஸ்டில் மூன்று சதங்கள் உட்பட அனைத்து வடிவங்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 10 சதங்கள், அந்த அணிக்கு எதிராக ஒரு பேட்டர் அடித்த அதிகபட்சமாகும்.
சதம் அடித்தும் இந்தியா தோல்வி
இது மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவதாக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி முந்தினார். முன்னதாக இந்தூரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நியூசிலாந்து இந்தியாவில் தனது முதல் ஒருநாள் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது.
டேரில் மிட்செல் (137) மற்றும் கிளென் பிலிப்ஸ் (106) ஆகியோரின் சதங்களால் நியூசிலாந்து 337 ரன்களை எட்டியது. இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.