இதுக்கு ஓகே சொன்னா தான் விளையாடுவேன்! பிசிசிஐக்கு பும்ரா நிபந்தனை! உண்மையை போட்டுடைத்த கோச்!

Published : Aug 01, 2025, 03:00 PM IST

இங்கிலாந்து தொடரில் 3 போட்டிகள் மட்டுமே விளையாடுவேன் என ஜஸ்பிரித் பும்ரா சொன்னதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

PREV
14
Jasprit Bumrah Gives Conditions To BCCI

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஓவலில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் சூப்பர் அரை சதம் (52 ரன்) அடித்து களத்தில் உள்ளார். 

இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில், இந்திய அணியின் நம்பர் 1 பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு 5வது டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

24
பும்ராவுக்கு ஓய்வு அளித்தது ஏன்?

பும்ரா இந்த தொடரின் முதல், மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இரண்டாவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்தார். ''மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் தயாராவதற்காக பும்ராவுக்கு முன்கூட்டியே ஓய்வு கொடுத்து இந்த தொடரில் முழுமையாக விளையாட செய்திருக்க வேண்டும்.

 நாட்டுக்காக விளையாடும் ஒருவர் மிக முக்கியமான ஒரு தொடரில் விளையாடுவது அவசியம்'' என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

34
இந்திய அணியின் துணை பயிற்சியாளர் விளக்கம்

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் பும்ரா முழுமையாக விளையாடாதது குறித்து இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷ்சேட் விளக்கம் அளித்துள்ளார். ''பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக ஜஸ்பிரித் பும்ரா தொடர் தொடங்குவதற்கு முன்பே தெரிவித்திருந்தார். பும்ராவின் முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய அணி நிர்வாகம் அவரை கடைசி டெஸ்டில் சேர்க்கவில்லை'' என்று ரியான் டென் டோஷ்சேட் கூறியுள்ளார்.

பும்ரா காயமடைந்தது எப்படி?

பும்ரா ஏற்கெனவே மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டதால், அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலைக்கு மதிப்பளித்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ரியான் டென் டோஷ்சேட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டின் போது பும்ரா காயம் அடைந்தார். இதனால் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் விளையாடவில்லை. இந்த காயத்தை தொடர்ந்து பிசிசிஐ பும்ராவின் உடற்தகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

44
நாட்டுக்காக முழு அர்ப்பணிப்பு வேண்டும்

இதனால் தான் அவரை அதிக போட்டிகளில் விளையாட வைக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது. பிசிசிஐயின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''பல கோடிகள் சம்பளம் வாங்கி, பல்வேறு சலுகைகளை அனுபவிக்கும் ஒரு வீரர் நாட்டுக்காக விளையாடும்போது நிபந்தனைகளை விதித்து விளையாடக் கூடாது. ஒன்று அவர் இந்த தொடரில் முழுமையாக விளையாடி இருக்க வேண்டும். இல்லாவிடில் தொடரில் இருந்தே விலகி இருக்க வேண்டும்'' என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பும்ராவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது

இது மட்டுமின்றி பிசிசிஐ பும்ராவை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. ஏற்கெனவே பல வீரர்கள் இந்திய அணியின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கும் வாய்ப்பளித்து பும்ராவுக்கு இணையாக உருவெடுக்க வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories