இதில் முதலாவது டி20 போட்டி நாளை (புதன்கிழமை) கான்பெராவில் நடைபெற உள்ளது. ஓடிஐ தொடரை இழந்ததால் முதல் டி20 போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்க முயற்சிக்கும். அண்மையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 வடிவில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. கிட்டத்தட்ட அதே அணி தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் களமிறங்குகிறது.
இந்திய அணி பேட்டிங் ஆர்டர் எப்படி?
இதில் நாளை நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் வழக்கம்போல் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். ஒன் டவுனில் திலக் வர்மா, அதன்பின்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ், மிடில் வரிசையில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே களமிறங்க உள்ளனர். இதன் பிறகு அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் களமிறங்குவார்கள்.