இந்திய அணிக்கு சாதகமாக செயல்படும்படி ஐசிசி தனக்கு நிர்பந்தம் விதித்ததாக பிரபல நடுவர் கிறிஸ் பிராட் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
Chris Broad: ICC Pressured Me to Be Lenient on India
இங்கிலாந்து முன்னாள் வீரரும், முன்னாள் நடுவருமான கிறிஸ் பிராட், இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும்படி ஐசிசி தனக்கு நிர்பந்தம் விதித்ததாக பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெலிகிராஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஐசிசி போட்டி நடுவராக இருந்தபோது இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு ஐசிசி உயர் அதிகாரிகள் தன்னை கேட்டுக் கொண்டனர் என்று கிறிஸ் பிராட் கூறியுள்ளார்.
24
கிறிஸ் பிராட் பரபரப்பு குற்றச்சாட்டு
அதாவது ''ஒரு ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 3 அல்லது 4 ஓவர்கள் குறைவாக வீசியதால் மெதுவான ரன் ரேட்டுக்காக அபராதம் விதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, 'மென்மையாக இருங்கள், சிறிது நேரம் ஒதுக்குங்கள், ஏனெனில் இது இந்தியா' என்று எனக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது. இதனால் வேறு காரணங்களை கூறி அதனை அபராதம் இல்லாமல் கொண்டு வந்தேன்'' என்று கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார்.
34
கிரிக்கெட்டில் அரசியல்
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''அடுத்த ஆட்டத்திலும், அதேதான் நடந்தது. அந்த போட்டியில் கேப்டனாக இருந்த கங்குலியிடம் நான் வேகமாக பந்துவீசும்படி சொன்னேன். ஆனால் அவர்கள் மெதுவாகத் தான் பந்து வீசினார்கள். அதனால் நான் போன் செய்து, 'இப்போது என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு கங்குலிக்கு அபராதம் விதிக்கும்படி என்னிடத்தில் நிர்பந்திக்கப்பட்டது. அப்போது தான் நான் கிரிக்கெட்டில் ஆரம்பித்துள்ளது அரசியல் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்'' என்றார்.
ஐசிசியை கையகப்படுத்திய இந்தியா
''இந்தியா அதிக பணத்தை வைத்துள்ளது. இப்போது பல வழிகளில் ஐ.சி.சி-யை கையகப்படுத்தியுள்ளது. நான் இப்போது நடுவராக இல்லாததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எப்போதும் இருந்ததை விட இப்போது மிகவும் அரசியல் நிலைப்பாடு அதிகம் உள்ளது'' என்று கிறிஸ் பிராட் குற்றம்சாட்டி இருக்கிறார். கிறிஸ் பிராட் இந்த தொடரையோ அல்லது போட்டியின் பெயரையோ வெளியிடவில்லை.
123 டெஸ்ட் போட்டிகள், 361 ஒருநாள் போட்டிகள் மற்றும் 138 டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய கிறிஸ் பிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரைப் பற்றிய மீம் ஒன்றைப் பகிர்ந்ததற்காக ஐசிசியால் கண்டிக்கப்பட்டார். 2003ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அவர் ஐசிசி நடுவராக இருந்துள்ளார். இந்திய அணிக்கு ஆதரவாக ஐசிசி நடந்து கொள்வதாக கிறிஸ் பிராட் குற்றம்சாட்டியுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.