IPL 2025: ரூ.24.75 கோடி வீரரை ரிலீஸ் செய்ய காத்திருக்கும் கேகேஆர் – மிட்செல் ஸ்டார்க்கை குறி வைத்த ஆர்சிபி!

First Published | Aug 27, 2024, 3:45 PM IST

2024 ஐபிஎல் ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை கேகேஆர் அதிக விலை கொடுத்து வாங்கியது. ஆனால், 2025 ஏலத்திற்கு முன்னதாக அவரை விடுவிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளது. இதனால் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுகின்றன.

Mitchell Starc, IPL most expensive player, IPL 2024, IPL

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது தான் ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவது. கவுதம் காம்பீரின் பிடிவாதத்தால் கேகேஆர் அவரை ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

Mitchell Starc

ஆனால், ஐபில் 2024 தொடரின் 17ஆவது சீசனில் பெரிதாக அவர் ஒன்றும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் பிறகு தான் கேகேஆர் அணி புரிந்து கொண்டது. இத்தனை கோடியை வீணாக்கிவிட்டோம் என்று. எனினும் மிட்செல் ஸ்டார்க் கேகேஆர் அணிக்காக 17 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அதிக ரன்களையும் வாரி வழங்கினார்.

Tap to resize

KKR - Mitchell Starc

இந்த நிலையில் தான் 2025 ஆம் ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்னதாக கேகேஆர் அவரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் புதிய விதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதாவது ஒரு அணி 3 முதல் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்வது என்பது பழைய விதி. ஒவ்வொரு அணியும் குறைந்தது 8 வீரர்களை தக்க வைத்து கொள்வது பிசிசிஐயிடம் ஆலோசனை நடத்தியது.

Kolkata Knight Riders

இந்த ஆலோசனையில் இதுவரையில் ஒரு முடிவு கூட எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மிட்செல் ஸ்டார்க்கை கேகேஆர் விடுவித்தால் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்க ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Royal Challengers Bengaluru

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஏற்கனவே ஸ்டார்க் ஆர்சிபி அணிக்காக விளையாடியிருக்கிறார். கடுமையான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள ஆர்சிபி ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் சுற்று வரை சென்றது. இதில், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. ஆனால் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக அமையவில்லை. ஆதலால், ஸ்டார்க்கை அணியில் சேர்த்து கொள்வது என்பது முகமது சிராஜிற்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.

Rajasthan Royals

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஆர்சிபியைப் போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் நல்ல டெத் பவுலர்கள் இல்லை. மிட்செல் ஸ்டார்க்கின் வருகை இந்த சிக்கலை தீர்க்கும். ஸ்டார்க் அணியில் இணைந்தால் டிரெண்ட் போல்ட் உடன் இணைந்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்துவார்.

Gujarat Titans

குஜராத் டைட்டன்ஸ்:

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் உடன் இணைந்து கடைசி வரை மிட்செல் ஸ்டார்க்கை ஏலம் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் போராடியது. சுப்மன் கில்லுக்கு அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்படும் நிலையில் அதற்கான தீர்வாக ஸ்டார்க் இருப்பார். அவர், முகமது ஷமி, ரஷீத் கான் ஆகியோர் உடன் இணைந்து சிறந்த பந்து வீச்சாளராக வர முடியும். ஆதலால் குஜராத் அவரை ஏலம் எடுக்க முயற்சிக்கும்.

Latest Videos

click me!