Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சச்சினுக்கு எதிரி - மோசமான அம்பயர் என்று பெயர் எடுத்த ஸ்டீவ் பக்னர்!

First Published | Aug 27, 2024, 1:46 PM IST

சச்சின் டெண்டுல்கர் பல சந்தர்ப்பங்களில் ஸ்டீவ் பக்னரால் தவறாக ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார். குறிப்பாக 2003 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் பக்னரின் தவறான முடிவால் சச்சின் ஆட்டமிழக்க நேரிட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Sachin Tendulkar

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பெரும்பாலான போட்டிகளில் நடுவரின் தவறான முடிவின் மூலமாக ஆட்டமிழந்து வெளியேறியிருக்கிறார். அதிலேயும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்திருக்கிறார். அப்படி ஒரு எல்பிடபிள்யூவில் சச்சினுக்கு ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுத்திருக்கிறார்.

Sachin Tendulkar and Steve Bucknor

கிரிக்கெட்டில் மிகவும் அனுபவமிக்க நடுவர்களில் ஒருவராக இருந்தவர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் பக்னர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். என்னதான் அனுபவமிக்க நடுவராக இருந்தாலும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினுக்கு தவறான தீர்ப்பு கொடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

Tap to resize

Steve Bucknor

நடுவர்கள் தங்களது தவறான தீர்ப்புகளின் மூலமாக உலக ரசிகர்களால் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளப்படுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் சச்சினுக்கு எதிராக நடைபெற்றது. முன்னாள் இந்திய அணியின் கேப்டனான சச்சின் டெண்டுல்கர் பல சந்தர்ப்பங்களில் பக்னரால் தவறாக அவுட் செய்யப்பட்டுள்ளார்.

Steve Bucknor

அப்படி ஒரு நிகழ்வு கடந்த 2003 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது. ஸ்டிரைக்கில் நின்றிருந்த சச்சினுக்கு ஜேசன் கில்லெஸ்பி பந்து வீசினார். ஆனால், பந்து பேட்டில் படாமல், சச்சினின் தொடையில் பட்டு சென்றது. இந்த நிலையில் தான் ஹாக்-ஐ டெக்னாலஜி பந்து ஸ்டெம்பிற்கு மேலாக சென்றதை தெளிவாக காட்டியது.

Steve Bucknor and Sachin Tendulkar

ஆனால், பக்னரால் சச்சின் டெண்டுல்கர் லெக் பிஃபோர் விக்கெட் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றைய காலகட்டங்களில் டிஆர்எஸ் எல்லாம் கிடையாது. எனினும் நடுவரது முடிவை கேட்டு சச்சின் பெவிலியன் திரும்ப சென்றார்.

Steve Bucknor

இதே போன்று ஒரு சம்பவம் இந்தியாவிலும் நடைபெற்றது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பக்னர் சச்சினுக்கு கேட்ச்சிற்கு அவுட் கொடுத்தார்.

Latest Videos

click me!