MS Dhoni: தோனியின் வெற்றி கொண்டாட்டம்: ஜெர்சியை கழற்றி ரசிகருக்கு அணிவித்த மகிழ்ச்சியின் உச்சகட்டம்!

First Published | Aug 27, 2024, 1:00 PM IST

2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதும் கேப்டன் தோனி தனது ஜெர்சியை கழற்றி ரசிகர் ஒருவருக்கு அணிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.

2007 T20 World Cup

2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்றது. அதோடு, டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சீசன்லியே இந்தியாவிற்கு வெற்றி தேடிக் கொடுத்த கேப்டன் என்ற பெருமையை எம்.எஸ்.தோனி படைத்தார்.

T20 World Cup 2007

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் தோனி பணக்காரர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு பின் தான் இருக்கிறார். தோனியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1040 கோடி ஆகும். ஏராளமான பிஸினஸும் செய்து வருகிறார். டி20 உலக கோப்பை தொடர் மட்டுமின்றி 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்று 3 ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்த பெருமை தோனியை சாரும்.

Tap to resize

MS Dhoni

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் தோனியின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசி வரை ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறக் கூடாது என்று ரசிகர்கள் ஆசைப்படும் தருணமும் உண்டு.

MS Dhoni

ஆனால், 2025 அல்லது 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முதல் தருணமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. என்னதாக் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக இருந்தாலும் களத்தில் எல்லாமே தோனி தான் என்று சொல்லும் அளவிற்கு அவரது அசைவு இருந்தது.

T20 World Cup 2007

இந்த நிலையில் தான் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் தோனி வெற்றி கொண்டாட்டத்தில் உச்சத்திற்கு சென்ற தருணம் ஒன்று இருந்தது. அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க. வெற்றியின் உச்சத்திற்கு சென்ற தோனி தனது ஜெர்சியை கழற்றி ரசிகர் ஒருவருக்கு அணிவித்த தருணம் தான் அது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது.

2007 T20 World Cup

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் இறுதி போட்டி உள்பட ஒரு சில போட்டிகள் தவிர வெற்றி தான். ஆனால், சில போட்டிகள் டையில் முடிந்தன. மேலும், சில போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

MS Dhoni Jersey

முதலில் விளையாடிய இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. இதில், கவுதம் காம்பீர் மட்டுமே சிறப்பாக விளையாடி 75 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.

MS Dhoni

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 152 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக முதல் முறையாக ஐசிசி டிராபியை வென்று கொடுத்த பெருமையை பெற்று கொடுத்த தோனி வெற்றியின் உச்சத்திற்கு சென்று தனது ஜெர்சியை கழற்றி சிறுவனுக்கு அணிவித்து மகிழ்ச்சி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!