கிரிக்கெட் மைதானத்தின் அச்சமில்லாத சிங்கம் - பயத்தை மறைக்க பாட்டு - சேவாக்கின் அதிரடிக்கு பின் உள்ள ரகசியம்!

First Published | Aug 26, 2024, 9:03 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், தனது துணிச்சலான ஆட்டத்திற்காக அறியப்பட்டவர். சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கொண்டவர். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றவர்.

Virender Sehwag

இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் பற்றி பலருக்கும் தெரியும். களத்திற்கு வந்த முதல் பந்து முதல் கடைசி பந்து வரையில் ஒரே அதிரடி தான். களத்தில் சேவாக் நிற்கும் வரையில் ரசிகர்களுக்கு வான வேடிக்கை தான். பவுண்டரியும், சிக்ஸரும் பறந்து கொண்டே இருக்கும்.

Virender Sehwag Song

டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று சதம் அடித்த ஒரே ஒரு இந்திய ஜாம்பவான் யார் என்று கேட்டால் அது வீரேந்திர சேவாக் தான். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தரை கதற கதற விரட்டி அடிப்பதில் வீராதி வீரன். சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு சச்சின் டெண்டுல்கரின் 200* ரன்கள் சாதனையை சேவாக் 219 ரன்கள் எடுத்து முறியடித்தார்.

Tap to resize

Virender Sehwag Salary

வீரேந்திர சேவாக்கின் சாதனையை இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்து முறியடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தனதாக்கிக் கொண்டார்.

Virender Sehwag Cricket Life

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் வீரேந்திர சேவாக்கிற்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவேளை களத்தில் பேட்டிங் பிடிக்கும் போது பயம் இருந்தால் அதனை மறைப்பதற்கு மனதிற்குள் பாட்டு பாடிக் கொண்டே விளையாடி சிக்ஸருக்கு பறக்க விடுவாராம். பொதுவாக எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் முதல் ஓவரின் முதல் பந்தில் டிஃபண்ட்ஸ் தான் விளையாடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே பந்து வருவதற்கு ஏற்ப பவுண்டரியோ, சிக்ஸரோ பறக்கவிடுவார்கள்.

Virender Sehwag Cricket Career

ஆனால், சேவாக்கைப் பொறுத்த வரையில் டிஃபண்ட்ஸ் ஆடுவது எல்லாம் கிடையாது. அதிரடி தான். எந்த பந்துவீச்சாளரையும் விட்டு வைக்கவேமாட்டார். எந்த பவுலரும் வீரேந்திர சேவாக்கை பார்த்து பயந்து தான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட வீரேந்திர சேவாக் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காகவும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

Virender Sehwag

வீரேந்திர சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ரன்கள் குவித்துள்ளார். இதே போன்று, 251 ஒருநாள் போட்டிகளில் 8,273 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர 19 டி20 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் 14 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!