பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்றக் கோரி ஐசிசி-யிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது.
டி20 உலகக் கோப்பைக்கான போட்டிகளை இந்தியாவிலிருந்து வெளியே மாற்றுமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் வங்கேசத்தின் ஆட்டங்கள் இந்தியாவில் தான் நடக்கும் என்று கூறியுள்ள ஐசிசி, வங்கதேசம் தங்களது முடிவை அடுத்த 24 மணி நேரத்தில் சொல்ல வேண்டும் என கெடு விதித்துள்ளது.
24
இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேசம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்வதால் பிசிசிஐ உத்தரவுப்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை தங்கள் அணியில் இருந்து நீக்கியது.
இதனால் பொங்கியெழுந்த வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் 2026 ஒளிபரப்பை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, 2026 டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து மாற்று இடங்களுக்கு மாற்றக் கோரி ஐசிசி-யிடம் கோரிக்கையும் வைத்தது.
34
வேறு இடத்துக்கு மாற்ற முடியாது
இது தொடர்பாக ஐசிசி இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. 'நாங்கள் இந்தியாவில் விளையாட மாட்டோம். எங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும்' என வங்கதேசம் விடாப்பிடியாக கூறி வந்தது. இந்த நிலையில் தான்
டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற முடியாது என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் வங்கதேச வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ள ஐசிசி, வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுமா? இல்லையா? என்பது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்தில் முடிவு சொல்ல வேண்டும்.
அப்படி வங்கதேசம் இந்தியாவுக்கு விளையாட வரவில்லை என்றால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்படும் என ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.