ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 58/4 என பரிதவித்தது. அதிரடி வீரர் பில் சால்ட் (0), பார்மின்றி தவிக்கும் ஜோஸ் பட்லர் (2), ஜேக்கப் பெத்தல் (8), டாம் பென்டன் (2) என முக்கியமான வீரர்கள் வரிசையாக அவுட் ஆனார்கள். ஆனால் கேப்டன் ஹாரி ப்ரூக் மறுமுனையில் அட்டகாசமாக விளையாடினார். சக பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சில் தடுமாற, ஆனால் ஹாரி ப்ரூக்கோ தனது ஸ்டைலிஷ் ஷாட்கள் மூலம், பவுண்டரியும், சிக்சருமாக நொறுக்கினார்.
செமி பைனல் சென்ற இங்கிலாந்து
அவருக்கு சாம் கரண் (16), வில் ஜாக்ஸ் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தனர். மறுபக்கம் தனியொருவனாக மேஜிக் இன்னிங்ஸ் விளையாடிய ஹாரி ப்ரூக் வெறும் 50 பந்துகளில் சூப்பர் சதம் விளாசினார். அணி வெற்றியை நெருங்கிய நேரத்தில் ஹாரி ப்ரூக் 51 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதன் பின்னர் வில் ஜாக்ஸ் (28) ஜேமி ஓவர்டன் (0) அடுத்தடுத்து அவுட் ஆனதால் இங்கிலாந்து சிறிது நெருக்கடியில் சிக்கியது. கடைசி ஓவரில் 3 ரன் தேவைப்பட்ட நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் பவுண்டரி அடித்து பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அணியை வெற்றி பெற வைத்தார். மேஜிக் இன்னிங்ஸ் விளையாடிய ஹாரி ப்ரூக் ஆட்ட நாயகன் விருது வென்றார்.