Reason Behind Abhishek Sharma Played in Super 8 Match : டி20 உலகக் கோப்பையின் முதல் மூன்று போட்டிகளில் 0,0,0 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவிற்கு, சூப்பர்-8 சுற்றிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் டக் அவுட் ஆன போதிலும், அபிஷேக் சர்மாவிற்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அணி நிர்வாகத்தின் இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? டி20 உலகக் கோப்பைக்கு முன், அபிஷேக் சர்மா சிறப்பான ஃபார்மில் இருந்தார். 21 போட்டிகளில் 193.46 ஸ்ட்ரைக் ரேட்டில் 859 ரன்கள் எடுத்தார். இதனாலேயே அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன
25
டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான அபிஷேக்
அபிஷேக் சர்மா ஒரு டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன். அதிரடி ஆட்டம் மூலம் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கக் கூடியவர். சர்வதேச டி20-ல் அவரது சிறந்த புள்ளிவிவரங்களும் அவருக்கு சாதகமாக உள்ளன.
35
கேப்டன் வைத்திருக்கும் நம்பிக்கை..
அபிஷேக் ஃபார்மில் இல்லாதபோது அவருக்கு ஆதரவளிப்பது எங்கள் கடமை. அவர் ரன் குவிக்கத் தொடங்கினால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்' என கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
45
கம்பீர், மோர்கல் ஆதரவு...
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னி மோர்கல் ஆகியோரும் அபிஷேக்கிற்கு ஆதரவாக உள்ளனர். அபிஷேக் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என மோர்கல் கூறியுள்ளார்.
55
அபிஷேக்கின் மோசமான சாதனை...
இந்த உலகக் கோப்பையில் 3 டக் அவுட்கள் உட்பட, ஒரே ஆண்டில் 5 முறை டக் அவுட் ஆன மோசமான சாதனையை அபிஷேக் படைத்துள்ளார். சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 15 ரன்கள் எடுத்தார்.