Hardik Pandya
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அந்தப் போட்டியிலிருந்து வெளியேறி ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றார். எனினும் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று அப்போது சொல்லப்பட்டது. அதன் பிறகு நடந்த எந்த போட்டியிலும் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை.
Hardik Pandya Ankle Injury
மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த டி20 தொடர், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.
Hardik Pandya
இந்த நிலையில் தான், நேற்று, ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் குணமாக கூடுதல் காலம் ஆகும் என்பதால், அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம் பெற மாட்டார் என்றும், அவர் ஐபிஎல் தொடரிலும் இடம் பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது ஹர்திக் பாண்டியா குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
Hardik Pandya
அதன்படி, ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட முழு உடல் தகுதியும் பெற்றுவிட்டார். ஆதலால், அவர் ஜனவரி மாதம் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தொடருக்கு தயாராகி வரும் வகையில், ஹர்திக் பாண்டியா தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.