ஷாக் மேல ஷாக் கொடுக்கும் MI? மீண்டும் ரோகித் சரமா கேப்டனா? ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை!

First Published | Dec 23, 2023, 4:29 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Hardik Pandya Mumbai

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக டிரேட் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

Mumbai Indians Captain

அதன் பிறகு ஓரிரு நாட்களில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கு ரசிகர்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர்.

Tap to resize

Rohit Sharma and Hardik Pandya

இதையடுத்து துபாயில் 17ஆவது சீசனுக்காக ஐபிஎல் ஏலம் நடந்தது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி ரூ.5 கோடிக்கும், நுவான் துஷாரா ரூ.4.80 கோடிக்கும், தில்ஷன் மதுஷங்கா ரூ.4.60 கோடிக்கும், முகமது நபி ரூ.1.50 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். மேலும், ஷ்ரேயாஸ் கோபால், ஷிவாலிக் சர்மா, அன்ஷூல் கம்போஜ், நமன் தீர் ஆகியோர் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

Rohit Sharma-Hardik Pandya

இந்தியாவில் நடந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் போடும் போது ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். வரும் ஜனவரி மாதம் நடக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூலமாக அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Rohit Sharma

ஆனால், ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையாத நிலையில், அவரால் ஆப்கானிஸ்தான் தொடர் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் கூட விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து முதல் சீசனிலேயே டிராபியை கைப்பற்றினார்.

Shubman Gill-Hardik Pandya

இந்த ஆண்டில் இறுதிப் போட்டி வரை சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டிரேட் முறையில் வாங்கப்பட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகாலமாக கேப்டனாக செயல்பட்டு 5 முறை டிராபியை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.

MI Next Captain

ஆனால், இப்பொழுது அவரே விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் இன்னும் குணமடையாத நிலையில், ஐபிஎல் தொடரில் இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது. இதன் காரணமாக மீண்டும் ரோகித் சர்மா கேப்டனாக வாய்ப்பிருக்கிறது.

Latest Videos

click me!