காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலகிய சூர்யகுமார் யாதவ்; டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார்!

First Published | Dec 23, 2023, 3:00 PM IST

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் நடக்க கூட முடியாத நிலையில், போட்டியிலிருந்து வெளியேறினார்.

Suryakumar Yadav

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்து முடிந்த டி20 தொடரின் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பீல்டிங்கின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் நடக்க கூட முடியாமல் போட்டியிலிருந்து வெளியேறினார்.

Suryakumar Yadav Out Of Afghanistan T20I Series

இதன் காரணமாக அவர் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Tap to resize

SKY Injured

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், 4-1 என்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சென்றது. இதில் முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ஆவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

Suryakumar Yadav

கடைசி போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், வலியால் துடித்த அவர் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு 2ஆம் நிலை தசைநார் கிழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதலால், அவரால் குறைந்த 3 மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Suryakumar Yadav

ஜனவரி மாதம் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். வரும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், அதில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!