Virat Kohli: என்னது கோலி மும்பைக்கு போகலயா? அப்புறம் எங்கதான் போனாரு? என்ன அவசரமுன்னு புறப்பட்டாரு தெரியுமா?

Published : Dec 23, 2023, 09:50 AM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் விளையாடி வரும் பயிற்சி போட்டியில் விராட் கோலி மும்பைக்கு வராமல் லண்டன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
16
Virat Kohli: என்னது கோலி மும்பைக்கு போகலயா? அப்புறம் எங்கதான் போனாரு? என்ன அவசரமுன்னு புறப்பட்டாரு தெரியுமா?
Virat Kohli vs South Africa Series

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றனர். ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது.

26
Anushka Sharma, Virat Kohli

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில், இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-1 என்று சமன் செய்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

36
Virat Kohli

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் எப்படியும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்திய அணி வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

46
Virat Kohli Test Match Series

இந்த நிலையில், தான் கடந்த வாரம் மும்பையிலிருந்து தென் ஆப்பிரிக்கா வந்த விராட் கோலி பயிற்சி போட்டியில் கூட பங்கேற்காமல் அவசர அவசரமாக மும்பை திரும்பியாக முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில்தான், விராட் கோலி மும்பை வராமல் லண்டனுக்கு சென்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

56
Virat Kohli Return To London

பிரிட்டோரியாவில் நடந்து வரும் 3 நாள் பயிற்சி போட்டியில் விராட் கோலி இடம் பெறவில்லையாம். முதல் நாளில் சுப்மன் கில், சர்ஃபராஸ் கான் ஆகியோர் சதம் அடித்தாக கூறப்படுகிறது.

66
Virat Kohli Test Match

ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பேட்டிங் செய்துள்ளனர். இதில், விராட் கோலி பங்கேற்காமல் அவர் மும்பைக்கு சென்றதாக கூறப்படுகிறது. குடும்ப அவசரநிலை காரணமாக பிசிசிஐ மற்றும் பயிற்சியாளரிடம் முறைப்படி தெரியப்படுத்திய பின்னரே விராட் கோலி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories