பலம் வாய்ந்த அணியாக மாறிய சிஎஸ்கே – ஆகாஷ் சோப்ரா பாராட்டு!

First Published | Dec 23, 2023, 9:19 PM IST

துபாயில் நடந்த ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பலம் வாய்ந்த ஒரு அணியாக மாறியுள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார்.

Chennai Super Kings, MS Dhoni

ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் ஏலம் கடந்த 19 ஆம் தேதி துபாயில் நடந்தது. இதில், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.24.75 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். ஆஸ்திரேலியா உலகக் கோப்பை கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

CSK Auction

இவர்களது வரிசையில் 3ஆவதாக இடம் பெற்றிருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல். இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி ரூ.8.40 கோடிக்கும், ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கும், முஷ்தாபிஜூர் ரஹ்மான் ரூ.2 கோடிக்கும், ரச்சின் ரவீந்திரா ரூ.1.80 கோடிக்கும், அவனிஷ் ராவ் ஆரவெல்லி ரூ.20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

Tap to resize

Chennai Super Kings

இந்த நிலையில் ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணியானது பலம் வாய்ந்த ஒரு அணியாக மாறியுள்ளது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: சிஎஸ்கே அணியானது ஷர்துல் தாக்கூர் மற்றும் ரச்சின் ரவீந்திரை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தது. இதன் காரணமாக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கும் அளவிற்கு சிஎஸ்கே அணியிடம் பர்ஸ் தொகை இருந்தது.

CSK

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 2 சதங்கள் அடித்தார். வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் டேரில் மிட்செல் தாக்கத்தை ஏற்படுத்துவார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள மொயீன் அலி பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அவருக்கு சரியான மாற்று வீரராக டேரில் மிட்செல் இருப்பார்.

Chennai Super Kings

சிஎஸ்கே அணியில் இடம் பெறக் கூடிய 4 வெளிநாட்டு வீரர்களில் டெவோன் கான்வே, டேரில் மிட்செல், மகீஷ் தீக்‌ஷனா மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் இடம் பெறுவார்கள். இல்லையென்றால் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளரான முஷ்தாபிஜூர் ரஹ்மானை பயன்படுத்தலாம்.

CSK

சிஎஸ்கே அணியில் அதிகளவில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பிளேயிங் 11ஐ கூட வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகளவில் இருப்பது போன்று கூட மாற்றிக் கொள்ளலாம். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கேர்கர், முகேஷ் சவுத்ரி ஆகியோர் இருக்கும் நிலையில் ஆல்ரவுண்டர்களாக டேரில் மிட்செல், முஷ்தாபிஜூர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலமாக ஐபிஎல் ஏலத்திற்கு பிறகு சிஎஸ்கே அணியானது பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!