
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார்.
இவருக்கும், பாலிவுட் நடிகையான நடாசா ஸ்டோன்கோவிச்சுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அதன் பிறகு ஜூலை 30 ஆம் தேதி இவர்களுக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் பிறந்தான்.
இதையடுத்து, மகன் பிறந்து 7 மாதம் கழித்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். உதய்பூரில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா திருமணம் நடந்துள்ளது.
அப்போது நாட்டையே அச்சுறுத்தி வந்த கொரோனா காரணமாக லாக்வுடன் போடப்பட்டிருந்த நிலையில், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்தனர். தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நடந்து வருகிறது. டெஸ்ட் தொடரில் இடம் பெறாத ஹர்திக் பாண்டியா ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் இருவரும் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். காதலர் தினத்தை முன்னிட்டு நாளை இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் இன்றே தொடங்கிவிட்டது.
உதய்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இவர்களது திருமண நிகழ்ச்சியிக்கு ஹர்திக் பாண்டியா குடும்பத்தினர், நண்பர்கள், நடாசா ஸ்டோன்கோவிச் குடும்பத்தினர், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் மெஹந்தி, சங்கீதா நிகழ்ச்சியும், ஹல்தி எனப்படும் மஞ்சள் பூசும் விழாவும் நடக்க இருக்கிறது. ஆனால், ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டோன்கோவிச் திருமணம் இந்து முறைப்படி நடக்குமா அல்லது கிறிஸ்துவ முறைப்படி நடக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா நடாசா ஸ்டோன்கோவிச்சின் 3 வயது குழந்தை அகஸ்தியாவும் இந்த திருமண நிகழ்ச்சியில் இருப்பான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தொடரைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஆரம்பமாகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா வலம் வருகிறார். கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் அணி முதல் சீசனிலேயே டிராபியை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.