
நாளுக்கு நாள் கிரிக்கெட்டின் மோகம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மற்ற பிரபலங்களைப் போன்று ஆடம்பர வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். கிரிக்கெட்டிற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டங்கள் உண்டு. அதிலும், சச்சின், எம் எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு என்று சொல்லவே வேண்டாம். உடல் முழுவதும் அவர்களது பெயரை டாட்டூ போட்டுக் கொள்ளும் அளவிற்கும், மைதானத்தில் அவர்களது போட்டியை காண வரும் போது போட்டியின் நடுவே அவர்களது காலில் விழுவது, கட்டியணைப்பதும் என்று பாசக்கார ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
ஆண்கள் கிரிக்கெட்டைப் போன்று தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் அதி தீவிரமடைந்து வருகிறது. பெண்களை ஊக்குவிக்கவும், விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரிக்கவும் செய்யும் விதமாக கிரிக்கெட் அமைந்து வருகிறது. ஆண்டு தோறும் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, விளையாட்டின் மூலமாக அவர்கள் பெறும் தொகை, ஐபிஎல் உரிமையாளர்களிடமிருந்தும், பிராண்ட் ஒப்புதல் மூலமாகவும் அதிக சம்பளத்தை வாங்குகிறார்கள்.
அப்படி ஆடம்பர வாழ்க்கை வாழும் பிரபலங்கள் ஒரு சிலருக்கு கார் மீது அதிக பிரியம் இருக்கும், சிலருக்கு பைக் மீது அளவுகடந்த பிரியம் இருக்கும். அந்த வகையில், கடந்த ஆண்டில் மட்டும் கார் மீது ஆசை கொண்ட பிரபலங்கள் வாங்கிய கார்களின் பட்டியலையும் அதன் விலையையும் இங்கு பார்க்கலாம்.
டி20யில் நம்பர் ஒன் வீரராக திகழும் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் ரூ.1.5 கோடியில் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக இவர் ரூ.3.61 கோடி மதிப்பிலான Porsche 911 Turbo S என்ற காரும், ரூ.1.59 கோடி மதிப்பிலான Mercedes-Benz GLE Coupe என்ற வகை காரும், ரூ.1.20 கோடி மதிப்பில் Mercedes-Benz GLS என்ற காரும், ரூ.1.20 கோடியில் Audi RS 5 என்ற காரும், ரூ.1.10 கோடியில் Land Rover Defender என்ற காரும், ரூ.1.02 கோடியில் ரேஞ்ச் ரோவர் வேலர் என்ற காரும், ரூ.51 லட்சத்திற்கு Mini Cooper S, ரூ.42.50 லட்சத்திற்கு Skoda Superb, ரூ.6 லட்சத்திற்கு Nissan Jonga காரும் வைத்திருக்கிறார். இந்த லிஸ்டில் Mercedes GLS 20 என்ற காரை சேர்த்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1.5 கோடி.
இந்திய கிரிக்கெட்டர் ஷிகர் தவானுக்கு கார் என்றால் அதிகம் பிடிக்குமாம். இவர் கடந்த ஆண்டில் ரூ.2 கோடி மதிப்பில் BMW M8 Coupe என்ற கார் வாங்கியுள்ளார். இது தவிர, ஷிகர் தவானிடம் ரூ.2.8 கோடியில் BMW M8 என்ற கார், ரூ.1.12 கோடியில் Mercedes Benz GLS என்ற கார், ரூ.1.1 கோடியில் Range Rover Velar என்ற ஆடம்பர கார்கள் வைத்துள்ளார்.
இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா A காண்ட்ராக்ட் மூலமாக பிசிசிஐயிடமிருந்து ஒரு வருடத்திற்கு ரூ.50 லட்சம் பெறுகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் மூலமாக ரூ.3 லட்சமும், டெஸ்ட் போட்டிக்கு என்று ரூ.4 லடசமும், ஒரு நாள் போட்டிக்கு ரூ.2 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.2.5 லட்சமும் சம்பளம் வாங்குகிறார். டபிள்யூபிபிஎல் தொடர் மூலமாக ரூ.3 லட்சமும் வாங்குகிறார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ரூ.2 முதல் ரூ.5 கோடி வரையில் வருமானம் ஈட்டுகிறார். தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார். கடந்த ஆண்டில் இவர் ரூ.72 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ரூ.16.27 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கிரேட், ரூ.8.80 லட்சம் மதிப்புள்ள மாருதி ஸ்விப்ட் டிசையர், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களும் வைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா கடந்த ஆண்டில் லம்போர்கினி உருஸ் என்ற வகை காரை வாங்கியிருக்கிறார். இந்த காரின் மதிப்பு ரூ.3.5 கோடி ஆகும். இந்த கார் தவிர ரோகித் சர்மாவிடம் ரூ.12.92 லட்சம் மதிப்பில் Mid-size sedan, ரூ.35.15 லட்சத்தில் Mid-size SUV என்ற கார், ரூ.56.50 லட்சத்தில் Luxury compact SUV என்ற கார், ரூ.1.55 கோடியில் Sports car கார், ரூ.1.05 கோடியில் SUV கார் என்று ஆடம்பரமான கார்களை வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டர் அஜின்க்ய ரகானே கடந்த ஆண்டில் ரூ.69.9 லட்சம் மதிப்பில் பிஎம்டபிள்யூ6 வகை கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதற்கு முன்னதாக ரூ.55 லட்சத்தில் Audi Q5 என்ற கார், ரூ.68 லட்சத்தில் Volvo XC60 என்ற கார், ரூ.85 லட்சத்தில் Range Rover Velar என்ற கார் வைத்திருக்கிறார். குறைவான கார்கள் வைத்திருப்பவர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனிக்கு கார், பைக் என்றால் அளவுகடந்த பிரியம். பெர்ராரி 599 ஜிடிஓ (ரூ. 1.39 லட்சம்), ஹம்மர் ஹெச்2 (ரூ.75 லட்சம்), லேண்ட் ரோவர் பிரிலேன்சர் 2 (ரூ.35 முதல் ரூ.48 லட்சம்), ஆடி க்யூ7 (ரூ.64 லட்சம்), ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக்வாக் (ரூ.1.12 கோடி), நிசான் ஜோங்கா (ரூ.6 லட்சம்), ஜிஎம்சி சியாரா (ரூ.70 லட்சம்) ஆகிய கார்களை வைத்திருக்கிறார். இது தவிர கடந்த ஆண்டில் ரூ.59.95 லட்சத்திற்கு எஸ்யூவி கியா ஈவி6 என்ற வகை காரை வாங்கியுள்ளார்.