குஜராத் அணிக்கு ஷாக்கிங் நியூஸ்: முன்னணி வீரர் விலகுவதாக தகவல்!

Published : Feb 26, 2023, 01:29 PM ISTUpdated : Feb 26, 2023, 01:40 PM IST

கடந்த ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து முக்கியமான வீரர் ஒருவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
17
குஜராத் அணிக்கு ஷாக்கிங் நியூஸ்: முன்னணி வீரர் விலகுவதாக தகவல்!
ஐபிஎல் 2023

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 16ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. மே 28 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

27
குஜராத் டைட்டன்ஸ்

10 அணிகள் இடம் பெற்றுள்ள இந்த தொடரின் அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

37
குஜராத் டைட்டன்ஸ்

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் காலடி எடுத்து வைத்த குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. சாம்பியனான குஜராத் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தான் இந்தாண்டு முதல் லீக் போட்டி நடைபெறவுள்ளது.

47
குஜராத் டைட்டன்ஸ்

இந்த ஐபிஎல் சீசன் தோனிக்கு கடைசி வருடம் என்பதால், இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கைப்பற்ற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

57
குஜராத் டைட்டன்ஸ் - ஜோஸ் லிட்டில்

இந்த நிலையில் குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் லிட்டில் தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த ஜோஸ் லிட்டிலை குஜராத் அணி ரூ.4.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 
 

67
ஜோஸ் லிட்டில்

இதுவரையில் 53 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளா ஜோஸ் லிட்டில் 62 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் சுற்றில் விளையாடி வந்த ஜோஸ் லிட்டில் தசைப்பிடிப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். 
 

77
ஜோஸ் லிட்டில்

இதே போன்று வரும் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்குள்ளாக அவருக்கு ஏற்பட்ட காயம் சரியாகவில்லை என்றால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories