கோலி - ஸ்டோக்ஸ் சண்டையில் ஸ்டோக்ஸ் ஜெயிச்சுட்டாராம்..! சுத்தி இருக்குறவனுங்க தொல்லை தாங்க முடியலடா சாமி

First Published Mar 5, 2021, 10:06 PM IST

கோலி - ஸ்டோக்ஸ் இடையேயான மோதலில் கோலியை வீழ்த்தி ஸ்டோக்ஸ் ஜெயித்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்துவருகிறது. 4ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் அடித்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 55 ரன்கள் அடித்தார். லாரன்ஸ் 46 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
undefined
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் அடித்துள்ளது. அபாரமாக ஆடி சதமடித்த ரிஷப் பண்ட் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து 60 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
undefined
இந்த போட்டியின் முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி - பென் ஸ்டோக்ஸ் இடையே மோதல் மூண்டது. 13வது ஓவரை வீசிய சிராஜ், அந்த ஓவரின் கடைசி பந்தை பவுன்ஸராக வீசினார். இதையடுத்து சிராஜை திட்டி சீண்டினார். ஸ்டோக்ஸின் சீண்டலுக்கு ரியாக்ட் செய்யாமல் நகன்ற சிராஜ், கோலியிடம் கோர்த்துவிட்டார். சண்டைக்காக காத்திருக்கும் கோலி சும்மாவிடுவாரா? பேர்ஸ்டோவிடம் பேசிக்கொண்டிருந்த ஸ்டோக்ஸிடம் சென்று கோலி பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அம்பயர்கள் நிதின் மேனனும் வீரேந்தர் ஷர்மாவும் இருவரையும் விலக்கிவிட்டனர்.
undefined
கோலி - ஸ்டோக்ஸ் இடையே முதல் நாள் ஆட்டத்தில் மோதல் மூண்ட நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் கோலியை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஸ்டோக்ஸ். இதையடுத்து கோலியை டக் அவுட்டாக்கியதன் மூலம், கோலி - ஸ்டோக்ஸ் இடையேயான மோதலில் ஸ்டோக்ஸ் ஜெயித்துவிட்டதாக இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னர் க்ரேம் ஸ்வான் கருத்து தெரிவித்துள்ளார்.
undefined
கிரிக்கெட்டில் மோதல்கள் எல்லாம் சகஜம். தெளிவான கிரிக்கெட் ரசிகர்களே இதெல்லாம் சாதாரண விஷயம் என அறிவார்கள். அப்படியிருக்கையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான ஸ்வான் முதிர்ச்சியற்ற கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பந்தில் 2 சிக்ஸர் அடித்து விட்டால் கோலி இந்த மோதலில் ஜெயித்துவிட்டார் என்று அர்த்தமா? என்னடா இதெல்லாம் கொடுமையா இருக்கு?
undefined
click me!