நல்ல ரெக்கார்டு மட்டுமில்ல; மோசமான ரெக்கார்டையும் விட்டுவைக்காத விராட் கோலி..! தோனியை சமன்செய்தார்

First Published Mar 5, 2021, 6:48 PM IST

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அதிகமான டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற சாதனையை தோனியுடன் சமன் செய்துள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்துவருகிறார். பழைய பேட்டிங் சாதனைகளை எல்லாம் தகர்த்து, புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். அவரது கெரியர் முடிவதற்குள் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
பேட்டிங் மற்றும் கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சாதனைகளை குவித்துவரும் விராட் கோலி, அதிக போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திவருவதால், மோசமான ரெக்கார்டுகளையும் படைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்.
undefined
அந்தவகையில், இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டான இந்திய கேப்டன் என்ற தோனியின் ரெக்கார்டை சமன் செய்துள்ளார். தோனி கேப்டனாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 முறை டக் அவுட்டாகியுள்ளார். விராட் கோலிக்கும் இந்த இன்னிங்ஸில் ஆனது 8வது டெஸ்ட் டக் அவுட்.
undefined
மேலும் 2014ம் ஆண்டுக்கு பிறகு ஒரே டெஸ்ட் தொடரில் 2 முறை டக் அவுட்டாகியுள்ளார் விராட் கோலி. இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் மொயின் அலி கோலியை டக் அவுட்டாக்கிய நிலையில், கடைசி டெஸ்ட்டிலும் டக் அவுட்டானார்.
undefined
click me!