அந்த பையனோட பேட்டிங் டெக்னிக்கில் பிரச்னை இருக்கு.! இளம் வீரரின் தவறை சுட்டிக்காட்டிய லெஜண்ட் லக்‌ஷ்மண்

First Published | Mar 5, 2021, 4:15 PM IST

ஷுப்மன் கில்லின் பேட்டிங் டெக்னிக்கில் பிரச்னை இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே நடந்துவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு பின்னர், இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான ஷுப்மன் கில், ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், பாராட்டையும் பெற்றார். அதன்விளைவாக இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்துவரும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றார் கில்.
Tap to resize

சென்னையில் நடந்த முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த கில், அதன்பின்னர் ஆடிய 5 இன்னிங்ஸ்களில் அடித்த ரன் 0, 14, 11, 15 மற்றும் 0 ஆகும். அகமதாபாத்தில் நடந்துவரும் கடைசி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனின் இன்கமிங் டெலிவரியில் வழக்கம்போலவே எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ச்சியாக 3 முறை எல்பிடபிள்யூ ஆகியுள்ளார் கில். இது அவரது பேட்டிங் டெக்னிக்கில் உள்ள குறைபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
இந்நிலையில், ஷுப்மன் கில் குறித்து பேசியுள்ள முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்‌ஷ்மண், உள்நோக்கி வரும் பந்துகளில் கண்டிப்பாக கில்லுக்கு பிரச்னை இருக்கிறது. குறிப்பாக ஃப்ளாட்டான பிட்ச்களில் உள்நோக்கி வரும் பந்துகளில் சிக்கிவிடுகிறார். அவரது பேட்டிங் டெக்னிக்கில் பிரச்னை உள்ளது. அவரது தலை கீழே விழுகிறது; அதை ஈடுகட்ட அவரது வலது கால் குறுக்கே வருகிறது. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய சிறந்த வீரர்கள் பென்ச்சில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து கில் சிறப்பாக ஆட வேண்டும் என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!