சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 3வது ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்த ஆண்டர்சன்!அக்ரம்,மெக்ராத்துடன் இணைந்தார்

First Published Mar 5, 2021, 7:27 PM IST

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வாசிம் அக்ரம், க்ளென் மெக்ராத் ஆகிய லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர்கள் பட்டியலில் இணைந்து அபார சாதனை படைத்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன். 
 

2003ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமான ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன், இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவருகிறார். 38 வயதான போதிலும், இந்த வயதிலும், உலகின் சிறந்த பேட்டிங் ஆர்டர்கள் பலவற்றை தனது ஃபாஸ்ட் பவுலிங்கால் சரித்துவருகிறார் ஆண்டர்சன்.
undefined
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றுவிட்ட ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி இன்னும் ஆடிவருகிறார்.
undefined
ஃபாஸ்ட் பவுலர் ஒருவர் 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவது மிகக்கடினமான விஷயம். அதை செய்துகாட்டியுள்ளார் ஆண்டர்சன். தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பயணத்திற்கு காயங்கள் தடையாக இருந்துவிடாத வண்ணம் ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி முழு உடற்தகுதியுடன் திகழும் ஆண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் பவுலிங்கில் பல சாதனைகளை படைத்துவருகிறார்.
undefined
டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை கடந்துவிட்ட ஆண்டர்சன், இந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் கடைசி டெஸ்ட்டில் ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தியதன்மூலம், 900 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனையை படைத்தார். ரஹானேவின் விக்கெட், ஆண்டர்சனின் 900வது சர்வதேச விக்கெட்.
undefined
டெஸ்ட் கிரிக்கெட்டில் 613 விக்கெட்டுகள், ஒருநாள் கிரிக்கெட்டில் 269 விக்கெட்டுகள், 18 டி20 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன்(1347), ஷேன் வார்ன்(1001), அனில் கும்ப்ளே(956), க்ளென் மெக்ராத்(949), வாசிம் அக்ரம்(916) ஆகியோருக்கு அடுத்து 5ம் இடத்தில் உள்ளார் ஆண்டர்சன்.
undefined
ஃபாஸ்ட் பவுலர்களை பொறுத்தமட்டில் வாசிம் அக்ரம், மெக்ராத் ஆகிய இருவருக்கு அடுத்த 3ம் இடத்தை பிடித்துள்ள ஆண்டர்சன், கண்டிப்பாக வாசிம் அக்ரம், மெக்ராத் ஆகிய இருவரையும் முந்திவிடுவார்.
undefined
click me!