SA vs IND Test: சேவாக் சதம் அடிச்ச மாதிரி ஜெய்ஸ்வாலும் அடிப்பார்னு எதிர்பார்க்க கூடாது – கவுதம் காம்பீர்!

First Published | Dec 26, 2023, 7:45 AM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேவாக் சதம் அடித்தது போன்று இளம் வீரரான ஜெய்ஸ்வாலும் அடிப்பார் என்று எதிர்பார்க்க கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.

Yashasvi Jasiwal and Virender Sehwag

கடந்த 2001 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெற்றது.

South Africa vs India Test

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி வீரேந்திர சேவாக்கின் முதல் டெஸ்ட். இந்த டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய சேவாக், 173 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார். இதே போன்று சச்சின் டெண்டுல்கர் மிடில் ஆர்டரில் களமிறங்கி 184 பந்துகளில் 155 ரன்கள் குவித்தார்.

Tap to resize

SA vs IND Test

தொடக்க வீரராக விளையாடிய ராகுல் டிராவிட் 2 ரன்னிலும், ஷிவ் சுந்தர் தாஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சச்சின் மற்றும் சேவாக் இருவரும் சதம் அடித்த போதிலும் இந்திய அணியால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.

Yashasvi Jasiwal and Virender Sehwag

முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டி டிரா செய்யப்பட்டவே இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

Yashasvi Jasiwal and Virender Sehwag

தற்போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக 2ஆவது முறையாக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். இதில், ரோகித் சர்மா இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உடன் தொடக்க வீரராக களமிறங்குவார்.

Yashasvi Jasiwal and Virender Sehwag

சேவாக்கைப் போன்று தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தவர் ஜெய்ஸ்வால். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார்.

Virender Sehwag and Yashasvi Jasiwal

தற்போது அடுத்த கட்டமாக தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டியைப் போன்று ஜெய்ஸ்வால் தனது அடுத்த டெஸ்ட் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறானது.

Virender Sehwag and Yashasvi Jasiwal

தென் ஆப்பிரிக்காவில் மார்கோ ஜான்சென், லுங்கி நிகிடி, கஜிசோ ரபாடா, நாந்த்ரே பர்கர் ஆகியோர் பந்து வீசும் போது பவுன்ஸ் அதிகமாக இருக்கும். இது அவருக்கு கடினமானதாக இருக்கும்.

Virender Sehwag and Yashasvi Jasiwal

அதோடு, வித்தியாசமானதாக கூட இருக்கும். இந்த அனுபவத்தின் மூலமாக அவர் சிறப்பாக வருவார் என்று நம்புகிறேன். ஒரு இளம் வீரர் வந்து சதம் அல்லது இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்க வேண்டும்.

Virender Sehwag and Yashasvi Jasiwal

இந்த பாக்‌ஷிங் டே டெஸ்ட் போட்டியானது ஜெய்ஸ்வாலுக்கு 3ஆவது போட்டி. ஜெய்ஸ்வால் தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் 266 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக அவர் 25 முதல் 30 ரன்கள் அடித்தால் கூட அது இந்திய அணிக்கு வலு சேர்க்க உதவும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!