IPL Auction 2024
இந்தியாவில் 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எனினும், இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஒவ்வொரு அணியிலிருந்தும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
Image credit: PTI
இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் வணிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹசல்வுட், ஹர்ஷல் படேல், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, சோனு யாதவ், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ், அவியாஷ் சிங், வெய்ன் பர்னெல் என்று 12 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
Harshal Patel
இதையடுத்து கடந்த 19 ஆம் தேதி துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் அல்சாரி ஜோசஃப், யாஷ் தயாள், லாக்கி ஃபெர்குசன், டாம் கரண், சவுரவ் சௌகான், ஸ்வனிப் சிங் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டனர்.
Harshal Patel
இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஆர்சிபி அணியில் சரியான தகவல் பரிமாற்றம் இல்லாமல் வீரர்களை விடுவித்ததால் அவர்களது லாயல்டி இஸ் ராயல்டி அந்தஸ்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
Harshal Patel
கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஹர்ஷல் படேல் ஏலம் எடுக்கப்பட்டார். மேலும், 2023 ஆம் ஆண்டு தக்க வைக்கப்பட்டார். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய ஹர்ஷல் படேல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் மற்றும் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகள் 19 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
RCB - Harshal Patel
ஆனால், 2203 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் அவர் 13 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். முதல் 2 சீசன்களில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த சீசன்களில் சொதப்பிய நிலையில் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபி அணியில் விடுவிக்கப்பட்டார்.
Harshal Patel
இந்த நிலையில் தான், இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஆர்சிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஹர்ஷல் படேலுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், ஒரு வீரரை விடுவிக்கும் முடிவு குறித்து ஆர்சிபி முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.
Royal Challengers Bangalore
2023 ஆம் ஆண்டுக்கு முன்பு அவர்களுடன் இரண்டு சீசன்கள் நன்றாக இருந்ததால், அந்த உரிமையாளரின் நம்பிக்கையை சிறிது காட்டலாம் என்று ஹர்ஷல் நினைத்தார். ஐபிஎல் 2024 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸால் ஹர்ஷல் 11.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.
RCB Released Players List
'எனக்கு நல்ல சீசன் இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கு முன், எனக்கு இரண்டு நல்ல சீசன்கள் இருந்தன, அதனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை காட்டுவார்கள் ஆனால் இல்லை என்று நம்புகிறேன்' என்றார். அவரைத் தக்கவைக்காதது குறித்து எந்த தொடர்பும் இல்லை என்று ஹர்ஷல் கூறியதாக,' ஆகாஷ் கூறினார்.
Harshal Patel
ஹர்ஷல் படேலுக்கு முன்னதாக சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் ஆர்சிபி அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.