குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. ஆனால், அவர் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ரூ.100 கோடி கொடுத்து வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் 17 ஆவது ஐபிஎல் 2024 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கான மினி ஏலம் கடந்த 19 ஆம் தேதி துபாயில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜெரால்டு கோட்ஸி, நுவான் துஷாரா, தில்ஷன் மதுஷங்கா, முகமது நபி, ஷ்ரேயாஸ் கோபால், ஷிவாலிக் சர்மா, அன்ஷுல் கம்போஜ், நமன் திர் ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்த ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் டிரேட் முறையில் அணிகளின் வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
27
Rohit Sharma and Hardik Pandya
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் தக்க வைத்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் அணியில் தக்க வைக்கப்பட்டிருந்தார்.
37
Hardik Pandya
இதையடுத்து 10 அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியான பிறகு ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் எடுத்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒப்பந்தம் செய்தது.
47
Hardik Pandya
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்த ஹர்திக் பாண்டியா 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இதில், குஜராத் அணியின் முதல் சீசனில் டைட்டிலும் பெற்றுக் கொடுத்துள்ளார். தற்போது ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த நிலையில், அவருக்குப் பதிலாக சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
57
Hardik Pandya
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தது முதல் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தான் ரோகித் சர்மாவிற்குப் பதிலாக ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது. உலகக் கோப்பை தொடர் முடிந்தது முதல் தொடர்ந்து ஐபிஎல் குறித்தும், ஹர்திக் பாண்டியா குறித்தும் தகவல் வெளியாகி வருகிறது.
67
IPL Trade 2024
இந்த நிலையில் தான் தற்போது மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ரூ.100 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஹர்திக் பாண்டியா வாங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணி வெளிப்படையாக அறிவித்தால் மட்டுமே உண்மையான தொகை எவ்வளவு என்பது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
77
Hardik Pandya
ஆனால், ரசிகர்கள் பலரும் ரோகித் சர்மா கேப்டனாக இருந்தால் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி வருகின்றனர். அதோடு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததற்கு பலரும் விமர்சனம் செய்தனர்.