என்னதான் இருந்தாலும் தல தோனி மாதிரி வருமா..? கோலிக்கு நாட்டைவிட குடும்பம் தான் முக்கியம்

First Published Nov 10, 2020, 5:28 PM IST

கோலி நாட்டைவிட குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதாக ரசிகர்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.
 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. முதலில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் அதன்பின்னர் கடைசியாக டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது.
undefined
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட்டில் மட்டும் ஆடிவிட்டு கேப்டன் கோலி இந்தியா திரும்புகிறார். அதனால் கடைசி 3 போட்டிகளில் அவர் ஆடாதது உறுதியாகிவிட்டது.
undefined
கர்ப்பமாக இருக்கும் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்கவுள்ளதால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து பாதியில் திரும்புகிறார் கோலி. எனவே ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத ரோஹித் சர்மா, மீண்டும் சேர்க்கப்பட்டார்.
undefined
இந்நிலையில், கோலியின் செயல்பாட்டை ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா பிறக்கும்போது, 2015ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார் தோனி. 2015ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி தோனிக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
undefined
குழந்தை பிறக்கப்போகிறதே.. அதற்கு போகவில்லையா என்று கேட்டதற்கு, நான் நாட்டிற்காக ஆட வந்துள்ளேன். எனவே அதுவே முக்கியம் என்று கூறி, உலக கோப்பையில் ஆடினார். ஆனால் கோலி, நாட்டைவிட குடும்பமே முக்கியம் என்று ஆஸ்திரேலிய தொடரிலிருந்து பாதியில் இந்தியா திரும்புவதாக ரசிகர்கள் கோலியின் அர்ப்பணிப்புணர்வை கேள்விக்குள்ளாக்கி சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர்.
undefined
click me!