என்னையெல்லாம் எதுக்கு தோனி சப்போர்ட் பண்ணாரு தெரியல என்னோட ரெகார்ட் மோசமா இருந்துச்சு இஷாந்த் சர்மா உருக்கம்.!

First Published | Nov 10, 2020, 10:43 AM IST

இஷாந்த் சர்மா தனது 17 வயதில் இருந்தே இந்திய அணிக்காக வேகப்பந்து வீச்சாளராக ஆடிவருகிறார். 2007 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 97 டெஸ்ட் போட்டிகளிலும், 80 ஒரு நாள் போட்டிகளிலும் 14 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பெரும்பாலும் டெஸ்ட் போட்டிகளில் தான் இவர் அதிகமாக ஆடியிருக்கிறார்

தோனியின் தலைமையில் டெஸ்ட் போட்டிகளுக்கு பிரதான வேகப்பந்து வீச்சாளராக இருந்தார் இஷாந்த் ஷர்மா. இந்நிலையில் சமீபத்தில் தோனியை பற்றியும் தன்னை எப்படி தோனி அணுகினார் என்பது பற்றியும் பேசுகிறார் இஷாந்த் ஷர்மா. அவர் கூறுகையில்
என்னுடைய முதல் 50-60 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகும் கூட தோனி ஒரு கேப்டனாக என்னை ஆதரித்தார். எனக்குப் பதிலாக வேறு ஒருவரை பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் ஒரு முறை கூடக் கூறியதேயில்லை
Tap to resize

உண்மையைக் கூற வேண்டுமெனில் 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பிறகும் கூட என்னால் சராசரி, ஸ்ட்ரைக் ரேட் இதையெல்லாம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் இதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை. நான் இதனைப் புரிந்து கொள்ளவில்லை எனும்போது நான் ஏன் இதை நம்பியிருக்க வேண்டும்? இவை வெறும் எண்கள் அவ்வளவுதான்
எனக்கு உலக கோப்பை தொடரில் ஆட வேண்டும். உலக கோப்பை தொடரில் விளையாட யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. அது உண்மையாகவே வேறு ஒரு உணர்வாகும். நாங்கள் தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடுகிறோம். அது ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு சமமானதாகும்
கேப்டன் சொல்வதைக் கேட்பவன் நான், எனவேதான் தோனி என்னை ஆதரித்தார், என்றார் இஷாந்த் சர்மா.

Latest Videos

click me!