இந்த நிலையில், ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து வீரர்கள் ஓவராக மது குடித்ததால் அவர்களின் செயல்திறன் பாதிக்கப்பட்டு தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டிக்கும், 3வது போட்டிக்கும் இடையே நீண்ட இடைவெளி இருந்தது. இங்கிலாந்து வீரர்கள் ஓய்வெடுப்பதற்காக பிரிஸ்பேனுக்கு வடக்கே சன்ஷைன் கோச்சில் உள்ள நூசா நகரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
தோல்விக்கு காரணம் இதுவா?
கடற்கரை அருகில் உள்ள அந்த ரிசார்ட்டில் இங்கிலாந்து வீரர்கள் ஓவராக மது குடித்து விட்டு ஆட்டம் போட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு புகார்கள் சென்றன. வெளிநாட்டு வீரர்கள் பீர், ஒயின் உள்ளிட்ட மது வகைகளை அருந்துவது இயல்பான ஒன்று.
ஆனால் முக்கியமான தொடருக்கு நடுவே இங்கிலாந்து வீரர்கள் அதிகமாக மது அருந்தியுள்ளனர். இதனால் சரிவர பயிற்சியில் ஈடுபட முடியாமல் 3வது டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடமல் சொதப்பியதாக குற்றம்சாட்டப்படுகிறது.