Shubman Gill: டி20 உலகக்கோப்பையில் சுப்மன் கில் விளையாடியே ஆக வேண்டும் என தேர்வுக்குழு கூட்டத்தில் கம்பீரும், அகர்கரும் பிடிவாதமாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணியை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது.
15 பேர் கொண்ட இந்திய அணியில் மோசமாக பேட்டிங் செய்து வந்த சுப்மன் கில் இடம்பெறவில்லை. கடந்த 16 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்காத சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டதை ரசிகர்கள் வரவேற்றனர்.
24
கம்பீரும், அகர்கரும் பிடிவாதம்
ஒருபக்கம் ரசிகர்கள் வரவேற்றாலும் மறுபக்கம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரும் சுப்மன் கில்லை செல்லப்பிள்ளை போல் பாவித்து வாய்ப்பு வழங்கி வந்ததால் அவர் நீக்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் சுப்மன் கில் விளையாடியே ஆக வேண்டும் என தேர்வுக்குழு கூட்டத்தில் கம்பீரும், அகர்கரும் பிடிவாதமாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
34
தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
அதாவது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கவுதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர், தேர்வுக்குழு உறுப்பினர்கள் பிரக்யான் ஓஜா, ஆர்.பி.சிங் மற்றும் மற்றொரு உறுப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது கில் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என கம்பீரும், அகர்கரும் விரும்பியுள்ளனர்.
கில் விளையாட பிரக்யான் ஓஜா, ஆர்.பி.சிங் கடும் எதிர்ப்பு
ஆனால் தேர்வுக்குழு உறுப்பினர்களான பிரக்யான் ஓஜா, ஆர்.பி.சிங் உள்பட 3 பேர் இதை விரும்பவில்லை. சுப்மன் கில்லின் மோசமான பேட்டிங் பார்மை காரணம் காட்டிய அவர்கள், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரை அணியில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
தேர்வுக்குழுவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கில்லுக்கு எதிராக நின்றதால் கம்பீர், அகர்கரால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி கடைசி நேரத்தில் சுப்மன் கில் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.