தொடர் தோல்விகள் காரணமாக, டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். அவர் ரன் குவிக்கத் தவறியதாலும், அணித் தேர்வுக் காரணங்களுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகளால், நட்சத்திர வீரர் சுப்மன் கில்லை டி20 உலகக் கோப்பை 2026 அணியில் இருந்து பிசிசிஐ நீக்கியுள்ளது. இந்த அதிரடி முடிவு கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25
துணை கேப்டனாக இந்திய அணியில் மீண்டும் நுழைதல்
ஆசிய டி20 கோப்பை 2025-ல் கில் துணை கேப்டனாக மீண்டும் அணிக்கு திரும்பினார். இந்த முடிவு, தொடக்க வீரராக ஜொலித்த சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தியது.
35
கில்லின் நுழைவு.. சஞ்சுவின் தியாகம்
சஞ்சு சாம்சன் இடத்தில் தொடக்க வீரராக வந்த கில், தொடர்ந்து சொதப்பினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் ஏமாற்றம் அளித்தார்.
மூன்றாவது டி20-ல் 28 ரன்கள் எடுத்த கில், காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் இருந்து விலகினார். ஐந்தாவது டி20-ல் சஞ்சு சாம்சன், கில்லின் 3 போட்டிகளின் மொத்த ரன்களை விட அதிகமாக அடித்தார்.