அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!

Published : Dec 21, 2025, 02:23 PM IST

இங்கிலாந்து அணி 2010/11 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. அந்த சோகம் தொடர்ந்து வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது.

PREV
14
ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஆஷஸ் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 371 ரன்கள் குவித்தது. அலெக்ஸ் கேரி தனது முதல் ஆஷஸ் சதத்தை (143 பந்துகளில் 106 ரன்கள்) அடித்து அசத்தினார். ஸ்டார்க் அரை சதம் (54 ரன்) அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 5 விக்கெட் வீழ்த்தினார்.

24
டிராவிஸ் ஹெட் சூப்பர் சதம்

பின்னர், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல்வுட்டாகி 85 ரன்கள் பின் தங்கியது. ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ், ஸ்டாட் போலண்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

 தொடர்ந்து 2வது இன்னிங்ஸ்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 349 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 219 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 170 ரன்கள் எடுத்து சூப்பர் சதம் விளாசினார். அலெக்ஸ் கேரியும் அரை சதம் (72 ரன்) அடித்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 435 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

34
அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன்

இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஜாக் க்ரொலி (85 ரன்), ஜேமி ஸ்மித் (60 ரன்) அரை சதம் அடித்தும் பலன் இல்லை.

 ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், மிட்ச்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுக்களை சாய்த்தனர். முதல் இன்னிங்ஸில் சதம், 2வது இன்னிங்சில் அரை சதம் மற்றும் விக்கெட் கீப்பராக 6 கேட்ச்களை பிடித்த அலெக்ஸ் கேரி ஆட்டநாயகன் விருது வென்றார்.

44
இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது

82 ரன்கள் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்து, தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 2010/11 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. அந்த சோகம் தொடர்ந்து வருகிறது. 

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் படுமோசமாக உள்ளது. பெரிதும் எதிர்க்கப்பட்ட ஸ்டார் வீரர் ஜோர் ரூட் கூட ஒரு சதத்தை தவிர பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories