இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய கருண் நாயர் அரை சதம் (57 ரன்) அடித்து அசத்தினார். சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதேபோல் ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
24
இங்கிலாந்து அணி விசித்திர சாதனை
இந்திய கேப்டன் ஷுப்மன் கில் இந்தத் தொடரில் அனைத்து ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியின் தொடர்ச்சியான டாஸ் தோல்விகளில் ஒரு விசித்திரமான சாதனையாகும். இதற்கு முன் 1999-ல் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து 12 டாஸ் தோல்வியடைந்தது. இதேபோல் இங்கிலாந்து அணியும் ஒரு விசித்திர சாதனை படைத்துள்ளது.
34
எக்ஸ்டிரா வகையில் 38 ரன்கள்
அதாவது இங்கிலாந்து அணியினர் பவிலிங்கில் எக்ஸ்டிரா வகையில் 38 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதில் 16 வைடு, 4 நோ பால்கள் ஆகியவை அடங்கும். பைஸ் வகையில் 12 ரன்களும் அடங்கும். இங்கிலாந்து வீரர் ஜோஸ் டங் மட்டுமே 4 வைடுகள் உள்பட அதிக ரன்களை வாரி வழங்கினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் 2வது அதிகப்பட்ச ரன்னே எக்ஸ்டிரா தான். கருண் நாயர் 56 ரன்களும், சாய் சுதர்சன் 38 ரன்களும் எடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து எக்ஸ்டிரா வகையில் 38 ரன்கள் கிடைத்துள்ளது.
முன்னதாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஐந்தாவது டெஸ்டின் முதல் நாளில் தோள்பட்டையில் காயமடைந்த வோக்ஸ், டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.