இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது. பென் டக்கெட் 38 பந்தில் 43 ரன்கள் அடித்தார். சாக் க்ரொலி அதிரடி அரை சதம் (57 பந்தில் 64 ரன்கள்) விளாசி அவுட் ஆனார். ஆனால் அதன்பிறகு முற்றிலுமாக தடம் மாறியது. முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி ஆல் அவுட்
ஆலி போப் (22), ஜோ ரூட் (29) விரைவில் வெளியேறினார்கள். இதேபோல் கடைசியில் ஜேக்கப் பெத்தேல் (6), ஜேமி ஸ்மித் (8), ஓவர்டென் (11) என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சூப்பர் அரை சதம் விளாசிய ஹாரி ப்ரூக் 53 ரன்னில் அவுட் ஆனார்.
கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறியதால் இங்கிலாந்து அணி 247/9 என இருந்தபோது அவர்களின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணியில் முகம்து சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்பு இந்திய அணி 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்கிறது.