ரஹானே, புஜாராவை முற்றிலுமாக ஓரம்கட்டிய பிசிசிஐ! துலீப் டிராபியில் இருந்து நீக்கம்!

Published : Aug 01, 2025, 10:15 PM IST

துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புஜாரா, ரஹானே துலீப் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

PREV
14
Rahane, Pujara Dropped From Duleep Trophy

துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷர்துல் தாக்கூர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துலீப் டிராபி அணியில் இந்திய வீரர் அஜின்க்யா ரஹானே இடம்பெறவில்லை. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரஹானேவின் உள்ளூர் கிரிக்கெட் வாழ்க்கையும் இப்போது பெரும் சிக்கலாகியுள்ளது.

24
துலீப் டிராபி போட்டி

இதேபோல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சேதேஷ்வர் புஜாராவுக்கும் துலீப் டிராபி அணியில் இடம் இல்லை. கடந்த ரஞ்சி சீசனில் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கடந்த ரஞ்சி சீசனில் மும்பை அணிக்காக பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அசத்திய ஷர்துல் தாக்கூர் தான் துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியை வழிநடத்துகிறார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுகிறார்

கடந்த ரஞ்சி சீசனில் மும்பை அணியை வழிநடத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டாலும், இந்த முறை அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட சர்ஃபராஸ் கான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் மேற்கு மண்டல அணியில் உள்ளனர். இங்கிலாந்தில் முதல் டெஸ்டுக்குப் பிறகு சரியாக விளையாடாத யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கு மண்டல அணியில் இடம் பிடித்துள்ளார்.

34
ஷர்துல் தாக்கூர் கேப்டன்

இந்த முறை அணிகளை ஆறு மண்டலங்களாகப் பிரித்து பழைய வடிவமைப்பிலேயே துலீப் டிராபி போட்டிகள் நடைபெறும். மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு மண்டலங்கள் இந்த முறை போட்டியிடும். 

துலீப் டிராபிக்கான மேற்கு மண்டல அணி: ஷர்துல் தாக்கூர் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆர்யா தேசாய், ஹார்விக் தேசாய், ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃபராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், ஜெயமீத் படேல், மனன் ஹிங்க்ராஜியா, சௌரப் நவாலே, ஷம்ஸ் முலானி, தனுஷ் கோடியன், தர்மேந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, அர்சான் நாக்வாஸ்வாலா.

44
துலீப் டிராபி எங்கு நடைபெறும்?

2025 ஆம் ஆண்டுக்கான துலீப் டிராபி மண்டல வடிவில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு, மேற்கு மண்டலம் நடப்பு சாம்பியனாக இருப்பதால், நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மற்ற அணிகள் காலிறுதிப் போட்டிகளில் விளையாடி, அரையிறுதிக்கு முன்னேறும். அனைத்து போட்டிகளும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories